தமிழகத்தின் புதிய மந்திரிகளில் ஒருவர் - Labour Minister திரு. செல்லபாண்டியன் செய்த காரியம் மிக விசித்திரமானது. தன் ஒரே மகளின் திருமணத்தை முன்னின்று நடத்தாமல் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா நடத்திய கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்னை சென்று விட்டார். அவருக்கு இதுதான் முதல் M L A மற்றும் மந்திரி பதவி. அவர் இன்னும் எத்தனை தடவை வேண்டுமானாலும் இந்த பதவிக்கு வரலாம். அதுவும் இந்த பதவி ஐந்து வருடம்தான். ஆனால் அவரின் மகளின் மனதில் பட்ட காயம், தன திருமணத்தின் போது அப்பா இல்லை என்ற குறை அவள் உயிரோடு இருக்கும் வரை, ஏன் அடுத்த வம்சம் வரை பேசப்படுமே. இது ஏன் அவருக்கு புரியவில்லை. அவர் சொல்லிய சமாதானம் வேடிக்கையாக உள்ளது. 'என் மகளும் அதிமுகவில்தான் இருக்கிறாள். அதனால் புரிந்து கொள்வாள்' என்று. கட்சி என்பது வேறு. குடும்பம் என்பது வேறு. அம்மாவின் விசுவாசியாக இருக்கலாம். ஆனால் அதற்காக சொந்த மகளை தண்டிக்க கூடாது. தகப்பன் இங்கேயே இருந்தும் திருமணத்திற்கு வரவில்லை என்றால் என்ன அர்த்தம்... பெற்ற மகளை விட அம்மா ஜெயலலிதாதான் முக்கியம், பதவிதான் முக்கியம். இதெல்லாம