Friday, 11 January 2013

பனி மூடிய காலை...




மாலை முகட்டிலிருந்து 
மெல்ல கீழிறங்கும் மேகங்கள்...

மின்சார கம்பிகளின் மேல் 
பறவைகளின் சத்தம் 
இல்லாத ஒடுக்கம்... 

பாதையின் குறுக்கும் நெடுக்குமான 
தன் ஓட்டத்தை குறைத்துகொண்டு  
சோர்ந்திருக்கும் காடைகள்...

முகமூடியாய் நடக்கும் 
மப்ளர் மனிதர்கள்...

இறுக்கமில்லா நினைப்புடன் 
என் முகம் தொட்ட பனியை     
முழுதாய் சுவாசிக்கும் நான்...

15 comments:

  1. நீங்கள் புத்தக வெளீயிட்டு இருப்பதாக அறிந்தேன். அதற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.... நிச்சயம் உங்கள் கவிதை பலர் மத்தியில் பேசப்படும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா....புத்தகம் வெளியீடு இன்றுதான்...

      Delete
  2. இயற்கை ரசிப்பை கவிதையிலும் இயற்கையின் வனப்பை உங்கள் வரிகளிலும் உணர முடிகிறது. உங்களோடு சேர்ந்து நானும் ரசிக்கிறேன். அருமை. புத்தகம் வெளிவருவதற்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கணேஷ்....உங்களின் பதிவில் எங்களின் புத்தகங்களை அறிமுகபடுத்தி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டீர்கள்....மிக்க நன்றி...

      Delete
  3. இயற்கையின் ரசிப்பை விட மகிழ்ச்சி வேறு எதுவாக இருக்க கூடும்? ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி உஷா...

      Delete
  4. இறுக்கமில்லா நினைப்புடன்
    என் முகம் தொட்ட பனியை
    முழுதாய் சுவாசிக்கும் நான்...

    ரசிக்கவைத்த காட்சிப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜேஸ்வரி...

      Delete
  5. மலை முகடு என்று இருக்க வேண்டுமோ? இல்லை நான்தான் தப்பாக நினைத்து விட்டேனா?

    உங்களுடன் நானும் பனியை சுவாசித்தபடி நடந்து வருவது போல உணர்வு. புகைப்படம் கவிதைகேற்றார் போல இருக்கிறது.

    புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் அகிலா!

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மலை முகடு என்று இருந்தாலும் அருமைதான்...எங்கள் வீட்டின் அருகில் முழு மலையையும் (Western Ghats) முடி இருக்கும் மேகங்கள்....அதுதான் அப்படி எழுதினேன் மேம்....

      நன்றி புத்தகத்தை வரவேற்றதற்கு...

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

      Delete
  6. காலையை பற்றி மாலையில் படிக்கிறேன்.. அருமை.. படமும் சூப்பர்..

    ReplyDelete
    Replies
    1. படிக்க டைம் கிடைப்பதே பெரிதுதான்...அது காலையாய் இருந்தால் என்ன...மாலையாய் இருந்தால் என்ன...ரசித்தால் போதும்...நன்றி கோவி...

      Delete
  7. காலைப்பொழுதின்
    அழகிய உணர்வு ...
    கவியில் மிகவும் அழகாக....

    தங்களின் சின்ன சின்ன சிதறல்கள் புத்தக
    வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் சகோதரி.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்....

      Delete
  8. மலை முகடுகளின் வழியே இறங்கும் மேகங்கள் போல உங்கள் கவிதையும் எங்கள் மனதில் இறங்கி விட்டது வாழ்த்துக்கள் ..

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....