Saturday, 8 September 2012

மௌன மோகம்...







உன் ஆசை காமம் என்றேன் 
இல்லை காதல் என்கிறாய் 

ஆசை அறுபது நாள் என்றேன் 
அதற்கும் மேல் என்கிறாய்...

மோகம் முப்பது நாள் என்றேன் 
அதுவும் பொய் என்கிறாய்..

தொலைவில் இருக்கும்வரை 
தொடத்தோன்றும் தான் உனக்கு... 

தொட்டுவிட்டால் 
தொடர தோன்றும் தானே...

தொடரும் போது 
சற்று இடரும்தானே...

 மறுபடியும் போய் நிற்கும் 
முன்னுரையில்தானே... 


 நீ தள்ளியே இரு 
உன் மனம் தள்ளாடும் வரை.... 




22 comments:

  1. காதல் போர்வை போர்த்திவரும்
    மௌனக் காமம் குறித்த கவிதை
    அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மௌனமான ஒரு மோகம்
      காதலின் முழுமைதானே....
      மிக்க நன்றி ரமணி அவர்களே...

      Delete
  2. நல்ல வரிகள்... அருமையாக முடித்துள்ளீர்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்....

      Delete
  3. நான் என் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.. அப்பாடா இன்னிக்கும் டெம்ப்ளேட் கமெண்ட் போடாம தப்பியாச்சு! :) :)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா....
      நானும் டெம்ப்ளேட் கமெண்ட் போடாம விட்டுட்டேன்....

      Delete
  4. காதல் என்றாலும் காமத்துடன் கூடிய காதல் என்றாலும் மனதுக்கு பிடித்தவரிடம் மட்டுமே இருக்கமுடியும். தள்ளியே வைத்தாலும் காமத்தீ எர்ந்துகொண்டுதானே இருக்கும்.நீ தள்ளியே இரு என்றாலும் மனம் என்னவோ அருகில் வா என்றுதான் அழைக்கிறது. அருமையான வரிகள்தான் என்றாலும் முடிவை மாத்தியிருந்தால் இன்னும் அருமைதான்.

    ReplyDelete
    Replies
    1. விச்சு....முடிவு மாறியிருந்தால் பெண்ணை சுலபமாக புரிந்து கொண்டுவிடுவீர்கள்...
      நாங்கள் புதிராக இருக்கும் வரைதான் பெண்கள்....

      Delete
  5. அருமையாக ஆரம்பித்து அதை விட அருமையாக முடித்துள்ளீர்கள் இந்த இனிய கவிதையையை.வாழ்த்துக்கள் அகிலா.நம்ம வலைப்பூ பக்கமும் வந்து பாருங்களேன்.,.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸாதிகா...கண்டிப்பாக படிக்கிறேன்....

      Delete
  6. காதலோ, காமமோ... தள்ளாடும் மனதின் முன் தடுமாறாத, தடம் மாறாத மனத்தின் நிலைப்பாடு அற்புதம். பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதமஞ்சரி.....

      Delete
  7. பெண்களுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கையோ எனவும் எண்ணத் தூண்டும் கவிதை!

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீர்கள் ரமேஷ்...நன்றி...

      Delete
  8. Replies
    1. நன்றி செய்தாலி...

      Delete
  9. அழகிய மௌனம்...

    ReplyDelete
  10. அருமையான வரிகள் காமமாம் மட்டும் இருந்தால் அங்கு காதல் செத்துவிடும் வேறு ஒரு இடத்தில உயிர்பிக்கும், ஆனால் காதலின் ஆன்மா இறந்து விட்டாலும் மட வேறு ஒரு இடத்தில உடனே உயிர்பிக்காது அது எங்கு முடிந்ததோ அதே இடத்தில வேதனைகளோடு சுற்றி சுற்றி நிற்கும் மீண்டும் ஒரு பிறவிகாலம் உண்மையாக வரும் வரை ..அனுபவித்தவர்களுக்கே அது நிதர்சனமான உண்மை ...உங்களை போன்ற கவிஞர்கள் அந்த நினைவுகளை கீறி வெளிய கொண்டு வந்து விடுகிறீர்கள் அதோடு உங்கள் பணி முடிந்து விடுகிறது ..நிஜத்தில் இருக்கும் எங்களை போன்றவர்கள் அந்த வரிகளுடன் வாழ வேண்டியதாக இருக்கிறது ..நன்றி

    ReplyDelete
  11. அருமையான வரிகள் காமம் மட்டும் இருந்தால் அங்கு காதல் செத்துவிடும் வேறு ஒரு இடத்தில உயிர்பிக்கும், ஆனால் காதலின் ஆன்மா இறந்து விட்டாலும் வேறு ஒரு இடத்தில உடனே உயிர்பிக்காது அது எங்கு முடிந்ததோ அதே இடத்தில வேதனைகளோடு சுற்றி சுற்றி நிற்கும் மீண்டும் ஒரு பிறவிகாலம் உண்மையாக வரும் வரை ..அனுபவித்தவர்களுக்கே அது நிதர்சனமான உண்மை ...உங்களை போன்ற கவிஞர்கள் அந்த நினைவுகளை கீறி வெளிய கொண்டு வந்து விடுகிறீர்கள் அதோடு உங்கள் பணி முடிந்து விடுகிறது ..நிஜத்தில் இருக்கும் எங்களை போன்றவர்கள் அந்த வரிகளுடன் வாழ வேண்டியதாக இருக்கிறது ..நன்றி

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....