Monday, 3 September 2012

ஆசைகள் மாறுமடி..

உனக்கு அடிக்கடி 




பிடித்து படிக்கும் புத்தகம் 
ரசித்து போடும் கோலம் 
விரும்பி அணியும் ஆடை 
தினசரி போகும் பாதை 
திரையில் தோன்றும் கதாநாயகன் 
தலையில் சூடும் பூக்கள் 
காதில் ஆடும் வளையம் 
இவையெல்லாம் மாறும்போது 
ரசிக்க தோன்றியது...


மனதில் குடிக்கொண்டிருந்த 
என் காதலையும்
அதில் சேர்த்தபோது
உன்னை வினவத் தோன்றியது 
என்று தூக்கியேறிவாய் 
உன் சலிப்பை...

19 comments:

  1. மனதில் குடிக்கொண்டிருந்த
    என் காதலையும்
    அதில் சேர்த்தபோது
    உன்னை வினவத் தோன்றியது
    என்று தூக்கியேறிவாய்
    உன் சலிப்பை...//

    அருமையான வரிகள்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பெண்களின் சலிப்பு நிஜம்தானே.....
      நன்றி ரமணி அவர்களே.....

      Delete
  2. Replies
    1. பின்னூட்டத்திற்கு நன்றி....

      Delete
  3. மனதில் குடிக்கொண்டிருந்த
    என் காதலையும்
    அதில் சேர்த்தபோது
    உன்னை வினவத் தோன்றியது
    என்று தூக்கியேறிவாய்
    உன் சலிப்பை...

    அருமை மட்டுமின்றி, எனக்கு புதுமையும் கூட, வினவ என்ற வார்த்தையை நீங்கள் கையாண்ட விதம் எனக்குப் புதுமையாய் தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. தானாகதான் தோன்றியது அந்த வார்த்தை. எனக்கும் பிடித்து போயிற்று...
      நன்றி தமிழ்ராஜா...

      Delete
  4. Nice one...keep it up

    ReplyDelete
  5. மாற்றங்கள் மாறாதது, ஆனால் உறவில் மாற்றம்.....கூடாதது. கவிதை அருமை அகிலா.

    ReplyDelete
  6. வாழ்வில் எது மாறினாலும் உறவுகள் மட்டும் மாறக்கூடாது.அழகான கவிதை அகிலா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸாதிகா உங்களின் வரவுக்கு...

      Delete
  7. இயல்பான காதல் கவிதை, ரசிக்க வைத்தது!

    ReplyDelete
  8. உன்னை வினவத் தோன்றியது
    என்று தூக்கியேறிவாய்
    உன் சலிப்பை....
    நியாயமான வினாவே...ஆசைகள் மாறுதடி...மனதும் தான்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. என்று தூக்கியேறிவாய்
    உன் சலிப்பை...
    பார்த்தமுதல் நாளில்... பாடலில் வரும்வரிபோல ”சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்...”

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....