அன்னா ஹசாரே என்ற ஒரு தனிப்பட்ட மனிதரை, ஒரு காந்தியவாதியை பற்றி ஒரு நாளுக்கு இரு முறை தினசரிகளும், ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை தொலைகாட்சிகளும் கடந்த 13 நாட்களாக அறிவித்துக்கொண்டே இருக்கின்றன. அவரின் உண்ணாவிரதம் லஞ்சம் என்னும் பெரும் பூதத்தை எதிர்த்துதான். ஊழலை ஒழிக்க அவர் எடுத்த இந்த முயற்சி பாராட்ட படவேண்டியதுதான். அதன் முடிவாக மத்திய அரசு லோக்பால் பில்லை கையில் எடுத்திருக்கிறது.
' இனிமேல் இந்தியாவில் ஊழலே யாரும் செய்ய முடியாது. செய்தாலும் தப்பிக்க முடியாது. .......'இப்படித்தான் ராம்லீலா மைதானம் மட்டும் அல்லாது நாடு முழுவதும் பேசிக்கொண்டு, இந்த 13 நாள் விசேஷத்தை கொண்டாடி முடித்துவிட்டு, 'அப்பாடா ஒரு பெரிய வேலை முடிந்தது' என்று எல்லோரும் வீட்டிற்கு போய் நிம்மதியாக தூங்கிவிட்டார்கள்.
நன்றாக நடந்தேறியது இந்த நாடகம். இதில் எத்தனை வர்த்தக நிறுவனங்கள் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதை ஆராய ஒரு கமிஷன் போட்டால் தேவலை.
நம் இந்திய அரசாங்கம் என்பது நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க அவ்வப்போது bill pass செய்வதும், committee அமைப்பதும், அதன் பிறகு அதை தூக்கி குப்பையில் போடுவதிலும் பேர் போன ஓன்று. இந்த Lokpal Bill ஒன்றும் அதற்கு பெரிய விஷயமில்லை.
இலட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தை காண்பித்தார்கள். நம் படித்த அறிவாளி மக்கள் இதை Facebook Followers கூட்டம் என்று நினைத்து ராம்லிலாவில் குவிந்துவிட்டார்கள்.
நம் நடுத்தர வர்க்கத்தில் உள்ள மக்கள், விலைவாசி ஏற்றம், கல்வி கட்டண உயர்வு, பெட்ரோல், எரிவாயு விலை ஏற்றம் போன்ற பிரச்சனைகளால் சமுதாயத்தின் மீது ஏற்பட்ட கோபத்தை 'ஊழல் ஊழல்' என்று கத்தி தீர்த்து கொண்டார்கள். Simply Mob Frenzy....
முதலில் அன்னா ஹசாரே சாதாரணமாக தான் உண்ணா விரதத்தை ஆரம்பித்தார். Media அதை பெரிதாக்கி தனக்கு சாதகமாக்கி கொண்டது. அவராலும் வெளியே வரமுடியாத சூழ்நிலையை உருவாக்கி அதில் குளிர் காய்ந்தது Times Group போன்ற பெரிய வர்த்தக திமிங்கலங்கள்.
ஒரு வயதான மனிதர் ஆகாரம் இல்லாமல் 13 நாட்கள் கழித்து தெளிவாக எழுந்து எப்படி கை ஆட்டவும் பேசவும் முடியும்? எல்லாம் Electrolytes இன் மாயம் தான். இனிமேலும் கூட அவரை இந்த திமிங்கலங்கள் பயன்படுத்தலாம். தயவு செய்து அவரை யாராவது ஒளித்து வைத்துவிடுங்கள்.
Team Anna என்று சொல்லிக்கொண்டு இருக்கும் சிலர், பெரிய பிசினஸ் நிறுவனங்களிடம் பணம் பெற்றுதான் தங்களுடைய NGOs சமுக சேவை அமைப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்னாவின் இந்த உண்ணாவிரத காட்சிகளுக்கும் அவர்கள்தான் பணத்தை இறைத்திருக்கிறார்கள்.
மக்கள் நினைப்பது மாதிரி அரசியல்வாதிகள் மட்டும் ஊழலுக்கு பொறுப்பில்லை. அவர்கள் வெறும் பொம்மைகள்தான். Corporate எனப்படும் வர்த்தக கூட்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களின் கை பொம்மைகளான NGOs (Non Governmental Organizations) நடத்தும் விபரீதமான விளையாட்டுதான் இந்த ஊழலும் உண்ணாவிரதமும்....
நம் இந்திய நாடு என்பது அழகான குடியாட்சி நடக்கும் ஜனநாயகம். இதில் குழப்பம் உண்டு பண்ணுவதும், காந்தியவாதியான அன்னா ஹசாரே போன்றோரை உபயோகிப்பதும், மக்களை முட்டாளாக்குவதும் சரியில்லை. அரசியல்வாதிகளுக்கும் உங்களுக்கும் இடையில் பிரச்னை என்றால் அதை நேருக்கு நேர் தீர்த்து கொள்ளுங்கள். மொத்தமாக இந்தியாவை பழிவாங்காதீர்கள்.
இந்நிலை இப்படியே சென்றால் இந்தியாவின் நிலை கேள்விக்குறிதான்...
ReplyDeleteஇந்தியாவை காப்பாற்றுவோம்...
நிஜம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதை நாம் நிப்பாட்ட வேண்டும். அப்போதுதான் நம் இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்படும்.
ReplyDelete