Saturday, 30 December 2017

புதுவருட கொண்டாட்டங்கள்

கவனமாக கொண்டாடவும் மும்பையில் நேற்று நடந்த ஒரு தீவிபத்தில் 14 பேர் இறப்பு என்று இன்றைய செய்திதாள் வாசித்தது. ஒரு சாலை விபத்தில் இருவர் இறந்தால் கூட கவனமாக ஏன் ஓட்டுவதில்லை என்னும் கவலை தொற்றிக்கொள்ளும் போது, இந்நிகழ்வு பெரிதாய் மனதுள் வருத்தம் தராதது போல் இருந்தது.

காரணம் அந்த செய்தியின் தலைப்பிலேயே இருந்தது, விபத்து நடந்த இடம் 'Pub', அப்புறம் அது ஒரு நள்ளிரவு கடந்த 'Birthday Party' என்பதுமாக இருக்கலாம்.

Pub, Party என்பதெல்லாம் நம் கலாசாரத்திற்கு தேவைதானா என்ற கேள்வியும் அதன் தொடர்ச்சியாய் தோன்றும் அதில் பங்கேற்கும் மனிதர்கள் மேல் நமக்கு ஏற்படும் ஒட்டாத தன்மையும் ஆகும்.

கோவில்களில் விசேஷ நாட்களில் கூடும் கூட்டத்தில் ஏற்படும் நெருக்கடியால் மிதிபட்டு (Stampede ) ஏற்படும் உயிர் இழப்புகள், புது பட ரிலீஸ் அன்று டிக்கெட்டு எடுக்க உண்டாகும் நெரிசலில் நேரும் இழப்புகள் இப்படி எத்தனை.. 2015 யில் மெக்கா புனித தளத்தில் நெரிசலில் இறந்த 2000 உயிர்கள் இன்னும் உலகத்தின் நினைவில் நிற்கும்..

மனிதர்கள் அதிகமாய் கூடும் இடங்களில் ஏற்படும் இம்மாதிரியான உயிர் இழப்புகள் ஒரு பெரிய சங்கடம்தான். தேவையற்ற இடங்களில் நம் இருப்பை நிலைநிறுத்த வேண்டிய அவசியங்களை குறைக்கவேண்டும். அதிக ஜனத்தொகை உள்ள நம் இடங்களில் பாதுகாப்பு என்பது மிக பெரிய கேள்விக்குறிதான்.

இதையும் ஒரு சாதாரண தீ விபத்தாய் என்னால் கடந்திருக்க முடியும். மனதில்லை. இது ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்.


இன்னும் ஒரு நாளில் பிறக்கவிருக்கும் புது வருட கொண்டாட்டங்கள், மது இல்லாமலே கடற்கரையில் குழந்தைகளுடன் இரவை கொண்டாடும் இப்புதிய தலைமுறை மக்கள் ( போன வருடம் பார்த்தோம் தொலைகாட்சியில்), அதிலும் மது அருந்திவிட்டு பெண்களுடன் நடத்தும் சில்மிஷங்கள் (அதையும் பார்த்தோம், அப்பெண்களும் கண்டுகொள்ளாததை) மனதுக்குள் ஒரு பயத்தைத் தருகின்றன, நாம் எங்கு போகிறோம் என்பதை நினைத்து.

இதில் உனக்கென்ன என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். பெரியவர்கள் மிதமிஞ்சியவர்கள். அவர்கள் குறித்து சொல்ல என்னிடம் ஏதுமில்லை. ஆனால் குழந்தைகளை இம்மாதிரியான நள்ளிரவு தாண்டிய கேளிக்கைகளுக்கு இழுத்துச் செல்லாதீர்கள். உயிர் இழப்பின் பயங்கரம் ஒரு புறம், வேண்டாத ஒரு கலாசாரத்தை முன்னிலைபடுத்துவதன் அபாயம் மறுபுறம்.

புது வருடத்தை அமைதியாக வரவேற்றாலும் கூட அது ஒன்றும் கோபித்து கொள்ளாது என்று நினைக்கிறேன்.

Celebrate Safe..


~ அகிலா..

6 comments:

 1. அர்த்தமுள்ள பதிவு உண்மை குழந்தைகளுக்கு ஏன் அதற்க்குள் கலாசார மாற்றத்தை அறிமுக படுத்தப்பட வேண்டும். பெரியவர்களும் ஏன் கால் மாறி நிற்க வேண்டும். உண்மை கோவிலில் கூட தவிர்க்க பட வேண்டிய இடமே மக்கள் வெள்ளத்தை குறைக்க கடவுளையும் கஷ்ட படுத்தாமல் இருக்கலாம்.

  ReplyDelete
 2. மிக நல்லதொரு பதிவு.... நானும் கூட்டங்களை தவிர்த்துவிடுவேன் ,,,சில பேருக்கு இப்படி கூட்டமுள்ள இடங்களுக்கு சென்று கத்தி மகிழ்வதுதான் சந்தோஷம் என நினைத்து கொள்கிறார்கள். இங்கே வசிக்கும் நாங்கள்(10 குடும்பங்கள்) எல்லோரும் யாராவது ஒரு வீட்டிற்கு சென்று புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம். புத்தண்டு மட்டுமல்ல தீபாவளி பொங்கல் கிறிஸ்துமஸ் தேங்க்ஸ்கிவிங்க் என்று மாறி மாறி ஒவ்வ்வொருவிட்டிலும் வைத்து கொண்டாடுவோம்

  ReplyDelete
 3. ஒருதடவை இந்தியா வந்த போது திருப்பதி சென்றோம் அங்குள்ள கூட்ட நெரிசலை பார்த்து அனுபவைத்த பின் இனிமேல் பாலாஜி வேண்டுமென்றால் எங்களை தேடி வரட்டும் நாங்கள் அவரை தேடி அங்கு செல்வதில்லை என்ரு முடிவு செய்துவிட்டோம் அதன் பின் பெரிய கொவில்களுக்கு செல்வதை விட சிறு கோயிலுக்கு சென்று வருகிறோம்

  ReplyDelete
 4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்
  அருமையான கண்ணோட்டம்

  இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
  எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
  அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

  ReplyDelete
 6. ஆதங்கமான பரிவுரைகள் நிறைந்த பதிவு. எனக்கும் இந்த பயம் (எல்லாம் நல்ல விதமாக முடிய வேண்டுமே என்ற ஒரு பதட்டம்) பொது நிகழ்ச்சிகளில் எனக்கு உண்டாகும். எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு – 2018 நல்வாழ்த்துகள்.

  ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....