Wednesday, 11 May 2016

வீட்டுக்கு பெயரிட்டாச்சு..




இனி
செங்கல்
சுடவேண்டும்

அறைகளும் நடுமுற்றமும்
அதில் சமைக்க வேண்டும்

தாழ்வாரம் இறக்கவேண்டும் - அதனுள்
திண்ணையொன்றும் கட்டவேண்டும்

கதவுகளுக்கும் சன்னல்களுக்கும்
தாழ் கோர்த்திடவேண்டும்

கணக்கிட்டவாறே கட்டி
வீட்டுக்கு பெயரும் இட்டாச்சு

அழைப்பிதழில்
சமையல்காரரின் பெயரும்
சேர்த்தாச்சு

மனிதர்கள்
மகிழ்வாய் வந்தார்கள்

இழுத்து இழுத்து பார்த்தாலும்
முரண்டிட்டு நிற்கிறது வாயிலில்,
வீட்டு பசு

சிலாகித்து
மாந்தர்கள் பேசிக்கொண்டார்கள்
ஏதோ குறையென்று

பெரியவள் ஓடிப்போனாள்
பழைய வீட்டை பார்த்து

வாசல் தட்டி மறைத்திருந்த
மல்லிகை பந்தலை பிடுங்கிவந்தாள்

ஆழ குழியிட்டு நட்டு
முன் வாசலில் படரவிட்டு திரும்பினால்,
பசு தலையசைத்தது

இனி
பூக்களோடு
மனிதர்களும்
வசிக்கலாம்.




4 comments:

  1. இனி
    பூக்களோடு
    மனிதர்களும்
    வசிக்கலாம்.

    ReplyDelete
  2. பூக்களோடு பேசிக்கொள்ளும் மொழியையும் கற்றுத்தாருங்கள் :)

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....