குழந்தைகள் வேண்டுமா
தனிமனித முடிவுகள், உரிமைகள் பற்றிய அலசல்கள் இப்போது நிறையவே வருகின்றன. அதில் ஒன்றாய் இன்று காலை நாளிதழில் படித்த ஒன்றை இங்கு பகிர்கிறேன்.
திருமணம் புரிந்து, குழந்தைகள் வேண்டாம் என்றிருத்தல் குறித்த கட்டுரை ஒன்றை படித்தேன் இன்றைய ஹிந்து தினசரியில். கௌரி டாங்கே, (குடும்ப ஆலோசகர், Always a parent ஆசிரியர்) அவர்கள் எழுதியது.
http://www.thehindu.com/features/magazine/gouri-dange-on-being-childless-by-choice/article7565746.ece
http://www.thehindu.com/features/magazine/gouri-dange-on-being-childless-by-choice/article7565746.ece
குழந்தைகள் இல்லாது இருத்தல் என்பதை ஒரு சாதாரண விஷயமாய் சொல்வது சுலபம். ஆனால், வாரிசுகளை தோள் தூக்கிச் சுமக்கும் நம் இந்திய சமூகத்தில், பத்து வருடங்கள் அல்லது பதினைந்து வருடங்கள் இல்லாது இருப்பது எனபது கடினமே. இந்த முடிவில் இருந்தவர்களை குடும்பத்தில் உள்ள மூத்த பெண்கள் தனிப்பட்ட முறையில் அவர்களின் முடிவை ஆதரித்திருப்பதை இவர் எழுத்தில் பார்க்கும் போது, வரவேற்க வேண்டிய ஒரு விஷயமாகவே தோன்றுகிறது.
நிறைய நடைமுறை குற்றச்சாட்டுக்களையும் கௌரி அலசியிருக்கிறார். அதை தாண்டி வரவும் வேண்டியிருக்கும் துணிந்து முடிவு எடுக்கும் இருவருக்குள்ளும் வேண்டும். வேண்டாம் இருப்பவர்கள், எப்போதும் சந்தோஷித்துக் கொண்டோ ஊர் சுற்றிக் கொண்டோ இல்லை என்கிறார். அவர்கள் மற்றவர்களுக்கு, கைவிடப்பட்ட வயதானவர்களுக்கு, மற்றவர்களின் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக, சமூகத்துக்காக வாழ்கிறார்கள் என்கிறார். இது ஒரு தத்துவார்த்த நிலை என்பேன். தன முடிவை சரியான பாதையில் செலுத்தி வாழ்விற்கு ஓர் அர்த்தம் தேடிக் கொள்கிறார்கள்.
என் தோழி ஒருத்தி தன் மகனுக்கு, திருமணம் முடித்து வைத்து ஒரு மாதத்தில் இருந்தே அவரைச் சுற்றி இருக்கும் சமூகம் விஷேசம் உண்டா எனக் கேட்கத் தொடங்கியதை கூறிய போது, நான் யோசிக்கிறேன், இதற்கு முன் இந்த சமூகம் அவரிடம் என்ன கேட்டிருக்கும் என்பதைப் பற்றி. அவர் சாப்பிட்டதையும் கோவிலுக்கு சென்றதையும் ஊரில் இருப்பதையும் இல்லாததையும் கேட்டுக் கொண்டிருந்திருக்கும். அவர்களுக்கு ஏதாவது பேசவும், விமர்சிக்கவும், அலசவும் பல விஷயங்கள் தேவைப்படுகிறது. அதில் இதுவும் ஒன்றாகிப் போகிறது. அதனால் அவர்களை ஒதுக்கிவிடுவதுதான் சில நேரங்களில் சிறந்ததாய் படுகிறது.
திருமணம் என்பதை வேண்டாம் என்று சொல்லி வாழும் ஆணையும் பெண்ணையும் நாம் ஏற்றுவிட்டிருக்கிறோம். ஜாதகம் சரியில்லாதது, அழகின்மை போன்ற கட்டாய காரணங்களைக் கொண்டு அந்த நிலைக்கு வந்திருப்பவர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. அவர்கள் சங்கடத்தினால் அதற்குள் நுழைந்தவர்கள்.
திருமணம் தேவையில்லை என்ற கொள்கை கொண்டு இருப்பவர்களைப் பற்றி பார்த்தால், இந்த நிலை பழங்காலத்து அவ்வைபிராட்டியாரின் வாழ்க்கையில் இருந்தே ஆரம்பிக்கிறது. அதற்கான காரணங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வைக்கு மூப்பும், ஆண்டாளுக்கு கண்ணனும், மணிமேகலைக்கு துறவறமும் கைக்கொடுத்திருக்கிறது. இவர்கள் எல்லோருக்கும் ஒரு காரணம் தேவைப்பட்டிருக்கிறது சமூகத்திடம் சொல்ல.
என் தோழமையில் ஒருவர் எண்பதுகளில் திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லாமல், அதையே காரணமும் சொல்லி, இருந்தபோது, சுற்றி இருந்த உறவு சமூகம் அவருக்கு அதிகமான ஆட்களைத் திருமணத்திற்கு பிடித்துக் கொடுத்து தன் கடமையை செய்ததாய் பீற்றிக் கொண்டது. ஆனால் அவரின் தாயே அதை ஏற்றுக் கொண்ட பிறகுதான், நமக்கென்ன என்று ஒதுங்கியது.
இன்று என் உறவில் உள்ள பெண் ஒருவர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். அப்போது இருந்த சமூக அழுத்தம் இன்று இல்லை. தாய் தகப்பன் இருவருமே அதை சத்தமின்றி ஏற்றுக் கொண்டார்கள். அது அவள் வாழ்க்கை என்பதில் தெளிவு காட்டுகிறார்கள்.
இதே நிலைதான் குழந்தை வேண்டாம் என்றிருப்பதற்கும் என நாம் சொல்லமுடியும். குழந்தைகள் என்பது நம் இரத்தம், வாரிசு என்பதெல்லாம் உண்மைதான். அதை தாண்டி தனி மனித சுதந்திரம் என்பது அதிகமான விவாதத்திற்கு இப்போது எடுத்துக் கொள்ளப்படுகிறது. குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிரமங்கள் தவிர்க்க, குழந்தைகள் மீது அதிக அல்லது கட்டாய ஈடுபாடு இல்லாத, அவர்களை வளர்க்க போதுமான பொருளாதார வசதியில்லாத இப்படி எத்தனையோ இல்லாதவைகளின் நடுவில் இந்த முடிவு தவறானது இல்லை என்றே தோன்றுகிறது. விருப்பம் இருப்பவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். சந்ததி தேவைப்படுவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். வசதி இருப்பவர்கள் பெற்றுக் கொள்ளட்டும் என்னும் நிலை இருக்கிறது.
இந்த பார்வை சமூகத்திற்கு நல்லதா என்னும் கேள்விக்கு நல்லதென்றும் ஒன்றில்லை, கெட்டதென்றும் ஒன்றில்லை தனிமனித விவாதத்தில். தனி மனிதனின் உணர்வே இங்கு பெரிதூன்றுகிறது இக்காலத்தில் என்பதே புரிகிறது. எனக்கு பிடித்திருந்தது பெற்றுக் கொண்டேன் என்று சொல்லும் பெற்றோர்கள், விருப்பத்துடன் செய்யும் இந்த செயலில் சிரமம் பார்ப்பதில்லை.
அதேபோல், விருப்பமற்று இருப்பவர்களைக் கட்டாயப்படுத்துதல் என்பதும் இதே போன்ற ஒரு நிலைதான். நல்லதும் கேட்டதும், விருப்பமும் விருப்பமின்மையும் எல்லாமே அவரவர் பார்வையைச் சார்ந்ததே.
காலம் வெகுவாய் மாறிவிட்டது என்பதை விட, தனிமனித சுதந்திரம் மேம்பட்டிருக்கிறது, அதை சமூகம் ஏற்றுக் கொண்டும் வருகிறது என்பதே நாளிதழ்களில் வெளிவருகின்ற இதுபோன்ற கட்டுரைகள், நேர்காணல்கள், விவாதங்கள் உறுதிப்படுத்துகின்றன.
சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது அருமையான அலசல் பகிர்வு.
ReplyDeleteசிறந்த பதிவு
ReplyDeleteபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
ஓ..பார்க்கிறேன்
Deleteநல்ல பகிர்வு...
ReplyDeleteநம் இரத்தம்... நம் வாரிசு... வளர்ப்புப் பிரச்சினை காரணமாக வேண்டாம் என்று நினைப்பது மிகச் சொற்பமே... என்ன இருந்தாலும் குழந்தை வேண்டாம் என்று இருக்க மனது வருவதில்லை என்பதே உண்மை...
நல்ல பகிர்வு அக்கா...
அதுவும் நிஜம்தான். இதுவும் நிஜம்தான். சமுகம் சிறிதாய் மாறிக்கொண்டேயிருக்கிறது. ஆனாலும் நம் குழந்தைகள் என்று வரும்போது ஒரு தனிப்பார்வை கொடுக்கிறோம்.
Deleteநன்றி தனபாலன். என்னால் இந்த முறை சந்திப்பில் கலந்துக்கொள்ள முடியவில்லை.
ReplyDelete