Monday, 20 July 2015

பட்டணத்து மழை



பட்டணத்தில் பெய்யும் மழைக்கு
பெயர்கள் இல்லை
கட்டிடங்களைக் கழுவி வடியும் தூறல்கள்
காய்ந்தே நிலம் தொடுகின்றன  
பெருமழையாய் இருப்பின்
வீதி தொடும்முன், காற்றின் புகை கரைத்து
கசாயம் செய்கின்றன  
வீதி தொட்டபின், கழிவுகளின் வாசம் சுமந்து
மணம் மாறுகின்றன

இந்த பட்டணத்து மழையில் மையல் கொண்டு,
கைவிரித்து தட்டான் சுற்றி,
கதாநாயகியாகும் ஆசையில்லை எனக்கு
வீதி நிறைத்தோடும் அதில்,
கால் கொண்டு, நீர் செதுக்கி
குழந்தையாகும் எண்ணமுமில்லை எனக்கு

மண்ணின் வாசத்தை
மழையின் வாசமாக்கி
கவிதை சமைக்கும் கற்பனையுமில்லை எனக்கு

பட்டணத்திற்கு பெருமழை பொருத்தமில்லை
பெருமழைக்கும் பட்டணம்
பாந்தமில்லை   


10 comments:

  1. சரி தான்... பொருத்தமில்லை தான்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தனபாலன்

      Delete
  2. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி.
    நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வீதி நிறைத்தோடும் அதில்,
    கால் கொண்டு, நீர் செதுக்கி
    குழந்தையாகும் எண்ணமுமில்லை எனக்குஃஃஃ
    உண்மை தான் சொநதமே மழையின் பரிசுத்தங்களை பட்டணம் பறித்து விடுகிறது.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்...சுத்தம் குறைவாகவே இருப்பதால், மழையும் அப்படியே..
      நன்றி தோழி..

      Delete
  4. உண்மைதான்! நேற்று பட்டணத்தில் பெய்த மழையில் நானும் கொஞ்சம் நாறிப்போனேன்!

    ReplyDelete
    Replies
    1. ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்..நம் ஊரை அத்துனை சுத்தமாய் வைத்திருக்கிறோம்..

      Delete
  5. காட்டில் நிலவாய்
    கடலில் மழையாய் என
    கவிஞர் வாலி சொல்லுவார்

    அதைப்போல
    நிச்சயம் பட்டணத்தில் மழையாய்
    எனவும் கொள்ளலாம்

    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தங்களுக்கு

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....