Sunday, 21 June 2015

அப்பா

தந்தையைப் போல் மகன் 


அப்பாக்கள் எப்போதும்
ஒரே மாதிரிதான்

பிறந்த பொழுதில் கைகளிலும்
வளரும் பொழுதில் தோள்களிலும்
வளர்ந்த பொழுதில் நெஞ்சினுள்ளும்
சுமக்க கடமைப்பட்டவர்கள்

பார்வைகளை
மொழிகளாக்குபவர்கள்
மௌனங்களை
வார்த்தைகளாக்குபவர்கள்
புன்னகையை
சிரிப்பாக்க யோசிப்பவர்கள்
பெற்ற மகவை
பொறுப்பின் கனமாய் உணர்பவர்கள்

அவரை புரிந்துக் கொள்ள,
பெண் மகவுக்கு
அவகாசங்கள் வேண்டாம்  
ஆண் பிள்ளைக்கோ
ஆண்டுகள் வேண்டும்   

எல்லா அப்பாக்களும் ஒரே மாதிரிதான்,
கண்களில் நிதர்சனமும்   
கனவுகளில் நிஜமுமாய்..


Happy Fathers Day 

8 comments:

  1. தந்தையர் தின சிறப்புக் கவிதை
    மிக மிக அருமை
    மிகக் குறிப்பாக...

    அவரை புரிந்துக் கொள்ள,
    பெண் மகவுக்கு
    அவகாசங்கள் வேண்டாம்
    ஆண் பிள்ளைக்கோ
    ஆண்டுகள் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா

      Delete
  2. மிகவும் அருமையான ஆக்கம். பாராட்டுகள்.

    இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

    //அவரை புரிந்துக் கொள்ள,பெண் மகவுக்கு அவகாசங்கள் வேண்டாம் // :)))))

    பகிர்வுக்கு நன்றிகள்>

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி

      Delete
  3. // மௌனங்களை
    வார்த்தைகளாக்குபவர்கள் //

    இதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்ட தெய்வம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தனபாலன் ..நன்றி

      Delete
  4. படத்தைப் பார்த்துப்
    படைக்கப்பட்ட
    உள்ளக் குமுறல்கள்

    ReplyDelete
  5. அப்பா நன்றாக வந்திருக்கிறார் உங்கள் வரிகளில்.
    -ஏகாந்தன்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....