மழையிடம்..
மழையிடம் மௌனங்கள் இல்லை
தொடும் மேகங்களுடனும்
வெள்ளை பூக்களுடனும்
பேசியபடியே கடக்கின்றது
மலர்களைப் போல்
மிதவைகள் கூட மழைக்கானவைதான்
மழையின் கரம் பற்றி
கதை சொல்கின்றன
தத்தளித்து தவிக்கின்றன
புதுக்கவிதைக்காரனைப் போல்
மிச்சங்களுடன் வாழும்
இந்த மிதவைகளிடமும்
மழையைப் போல் மௌனங்கள் இல்லை
அருமையான கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteமழை அடித்துச் செல்லும் மிதவையின் போக்கில்
ReplyDeleteசொற்கள் பெய்து உங்களின் கவிதை
அருமை சகோ.
தொடர்கிறேன்.
மிக்க நன்றி நண்பா
Deleteவணக்கம்
ReplyDeleteஅருமையாக உள்ளது இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பும் நன்றியும் ரூபன்
Deleteநன்றி தனபாலன்
ReplyDelete//தத்தளித்து தவிக்கின்றன
ReplyDeleteபுதுக்கவிதைக்காரனைப் போல் //
:) நல்ல உதாரணம். ரசித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்