Sunday, 29 March 2015

எதை பேச முடியும்..




விதைத்துவிட்டு திரும்புவதற்குள் 
பசியென அவற்றை புசித்திருக்கும் 
இந்த அதிகாலை குருவிகளிடம் 
என்ன பேச?

வேகமாய் சென்ற மேகம் 
கீழே விழுந்து உடைந்ததையா?
தாள் பூக்களின் மீதமர்ந்த சிட்டுகள்
தேன் குடிப்பதாய் பாவனை செய்வதையா?
ஊரும் சர்ப்பத்தை விடுத்து கருடன் 
ஓடும் கன்றின் வால் பிடித்திழுப்பதையா? 
எதை பேச முடியும் அவற்றிடம்?

பெயரிடப்படாத கண்ணீரின் சுவையை, 
அர்த்தமற்ற ஆகம கூச்சலாய் போன 
என் வார்த்தைகளின் மீது 
பூசிக் கொள்வதை தவிர..


12 comments:

  1. வணக்கம்
    ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்

      Delete
  2. அருமை... ஆனால் குருவி இருக்கா...?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...சரியான கேள்விதான் தனபாலன்.

      Delete
  3. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவரது தளத்தில் http://gopu1949.blogspot.in/2015/07/33_3.html என்ற முகவரியில் உங்களது தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தங்களது தளத்தினைக் கண்டேன். பாராட்டுக்கள்.
    http://www.ponnibuddha.blogspot.com/
    http://www.drbjambulingam.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தங்களுக்கு. அய்யாவின் பதிவையும் படித்தேன். தங்களின் தளங்களையும் பின்தொடர்கிறேன். மகிழ்ச்சி

      Delete
  4. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி ...
      சிரமம் மேற்கொண்டு அய்யா இங்கு பதிவுகளைப் படித்து பார்த்து எழுதியிருப்பதை அறிந்து வியந்தேன். நன்றி தங்களுக்கும்
      தங்களின் பதிவுகளையும் தொடர்கிறேன்

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....