விருது
அந்த அறக்கட்டளையின் தலைவர் திரு டிராகன் ஜெய்ராஜ் அவர்களின் இரண்டு நூல்களும் அன்று வெளியிடப்பட்டன. சரித்திர கதைகள் எழுதுவதில் வல்லவரான ஜெய்ராஜ் அவர்கள் வர்மக் கலை ஆசானும் கூட.
அவரின் வர்மக்கலையின் கர்ப்பிணி அடங்கல் என்னும் நூல், பெண்களுக்கானது. அதை நான் வெளியிட, திவ்ய சீலன் என்பவர் பெற்றுக் கொண்டார்.
கவிதைகளில் சிறப்பாய் செய்து வருவதால், எனக்கு Queen of Poets என்னும் விருது திரு பெ சிதம்பரநாதன், ஓம் சக்தி இதழின் பொறுப்பாசிரியர் அவர்களால் வழங்கப்பட்டது.
நூலைப் பற்றிய அறிமுகமும் பரிசுக்கான என் ஏற்புரையும்
என் ஏற்புரை
என் இனிய மாலை வணக்கம்.
என்னை குறித்த நண்பர் ஜெயராஜ் அவர்களின் அறிமுகத்திற்கு நன்றி. எனக்கு கிடைத்துள்ள
இந்த விருதுக்காக ஜெய்வர்மம் அறக்கட்டளைக்கும் நண்பர் திரு டிராகன் ஜெய்ராஜ்
அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஜெய்வர்மம் அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு துறையை
சார்ந்தவர்களை கெளரவிப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. விருதை
பெறும் போது நாமும் இந்த சமூகத்துக்கு உயர்வாய் ஒன்றை கொடுத்திருக்கிறோம் என்கிற
எண்ணமும் அதை தொடர்ந்து செய்யும் ஊக்கமும் மனதில் பிறக்கிறது. மீண்டும் என்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய நண்பரும் இந்த அறக்கட்டளையின் தலைவருமான ஜெய்ராஜ் அவர்களைப்
பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.
வர்மக்கலை சம்பந்தமான அவருடைய நூல்களை எனக்கு அனுப்பியிருந்தார்.
படித்துப் பார்த்தேன். இதற்கு முன் வர்மக்கலைப் பற்றி ஒரு பயம் இருந்தது. மர்மமான ஒன்று
என்பதான எண்ண்ம். அதை பற்றிய தெளிவான சிந்தனை இல்லாதது
அவரின் நூல்களை படித்தப்பின் தான் தெரிந்தது, அந்த கலை எவ்வளவு
பழமை வாய்ந்தது, அதை வைத்து நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தலாம்
என்பது.
அந்த வர்மக்கலையை அடிப்படையாய் கொண்டு அவர் நாவல்களும் எழுதியுள்ளார்.
அனைத்தும் சரித்திர நாவல்கள். அதில் அவரின் எழுத்து திறமையும் கண்டு வியந்தேன்.
தோய்வில்லா எழுத்து நடை, கதையின் நாயகனின் மூலமாய் வர்மத்தின் சில பல உத்திகளையும் சொல்லி
நம்மை வியக்க வைக்கிறார்.
இன்று வெளியிடப்பட்ட கர்ப்பிணி அடங்கல் நூலை பற்றியும் கூற
விழைகிறேன். இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில் குழந்தை பேறு என்பது பிரசவம் என்பது
பெரும்பாலும் சிசேரியன் தான் என்று முடிவு செய்யப்படுகிறது. காரணங்கள் பல. இன்ன தேதி இன்ன நேரம் என முடிவு செய்யும் மூடநம்பிக்கைகள் ஒரு பக்கம். சரியான உடல் உழைப்பு இல்லாமை மறு பக்கம். பழைய காலம் போல் குனிந்து
நிமிர்ந்து வேலை செய்ய நேரமும் இல்லை. மனதும் இருப்பதில்லை. உடல் உழைப்பு குறையும்
போது சுகப்பிரசவதிற்கான வாய்ப்பும் குறைந்து போகிறது.
அப்படிப்பட்ட நிலையில் வேறு வழிகளில் மிதமான உடற்பயிற்சி போன்றவற்றின்
மூலம் சுக பிரசவம் கொண்டு வரமுடியும். இந்த நூலில் சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகளை
வர்மத்தின் மூலம் பெறுவது எப்படி என்பது இந்நூலில் ஆசிரியர் விளக்கி
எழுதியுள்ளார்.
அவரிடம் நான் கேட்ட கேள்வி ஒன்றுதான். இந்த வழிமுறைகளை வர்மகலையில் தேர்ந்த ஆசானிடம் போய்தான் செய்ய வேண்டுமா என்பதே. பெண்கள் தாங்களே செய்யக்கூடிய எளிய பயிற்சி முறைகள்தான் இவைன்னு சொன்னார்.
இது தவிர்த்து, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வரக்கூடிய தலைவலி, வயிற்று வலி, சோர்வு, இரத்த சோகை போன்ற
எல்லாவற்றிற்கும் வர்மக்கலை பயிற்சிகளை இந்த நூலில் எழுதியிருப்பதாக சொன்னார்.
எனக்கும் இதையெல்லாம் கேட்டவுடன் அந்த நூலை வாங்கி படிக்கும் ஆர்வமும்
வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். பெண்களுக்கு பயனுள்ள நூல்தான் இது.
இந்த சபையில் நான் இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன். புத்தகம் படித்தல் என்னும் விஷயத்தை ப்ரோமொடே பண்றோம். என்பது
நான் எல்லோருக்கும் சொல்ல விரும்பும் ஒரு விஷயம். நான் ஒரு கவிஞர் என்பதால்
மட்டுமல்ல.எனக்கு மிகவும் விருப்பமான ஓன்று.,
நானும் இன்னும் ஒரு தோழியும் சேர்ந்து பெண்களுக்கான வாசகர் வட்டம், முல்லை வாசகர் வட்டம்
ஒன்றை தொடங்கியுள்ளோம். வார இதழ் மாத இதழ் தவிர்த்து வேறு எந்த புத்தகங்களையும்
படிப்பதில்லை என்னும் குறை இருக்கிறது. செயல்ப்படுத்தி வருகிறோம். அதிலும்
வர்மக்கலை பற்றிய நூல்களை பெண்களுக்கு படிக்க அறிமுகப்படுத்தியுள்ளேன். .
இந்த மாதிரி ஒரு சில நல்ல விஷயங்களை செய்வதற்கு மொழியோடான எனது
தொடர்பு மேலும் வலு பெறுவதற்கும் இந்த விருது வந்து ஒரு ஊக்க சக்தியாய் இருக்கும் என்பதில் மகிழச்சியே. எனக்கு விருது வழங்கி கௌரவித்தமைக்கு நண்பர் டிராகன் ஜெய்ராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்
மிகவும் மகிழ்ச்சி சகோதரி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி தனபாலன்
Deleteநல்ல கவிதைகள் பலவற்றை எழுதி, விருதும் பெற்ற உங்களின் ஏற்புரையை இந்தப்பதிவில் வெளியிடலாமே சகோதரி? வெளியிட வேண்டுகிறேன். நன்றி, பாராட்டுகள். வணக்கம்.
ReplyDeleteகண்டிப்பாக செய்கிறேன் தோழா
Deleteஎன் ஏற்புரையை எழுதியிருக்கிறேன். நன்றி உங்களின் ஆர்வத்திற்கு..
Deleteபெ.சிதம்பரநாதன் அவர்கள் முதுபெரும் வானம்பாடிக் கவிஞர்களில் முக்கியமானவர். தங்களுக்கான விருதின் பெயரைத் தமிழில் தந்திருக்கலாம். அடுத்த முறையாவது அதுபற்றி யோசிக்கட்டும். நீங்களும் இதுபற்றி அவர்களிடம் பேசலாமே?
ReplyDeleteபெ சிதம்பரநாதன் அய்யா அவர்களின் பேச்சும் அற்புதமாய் இருந்தது அன்று.
Deleteவிருதின் மொழி குறித்து நானும் சற்று யோசித்தேன். ஆனால் அந்த அறக்கட்டளையின் விருதுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே அமைத்திருக்கிறார்கள். இதை அவர்கள் வருடமாய் செய்து வருகிறார்கள். அதனால் நான் அது குறித்து அவர்களிடம் பேசவில்லை..