Saturday, 21 February 2015

எத்தனை முறை பயணிப்பது..



தண்டவாளங்களின் மேல் ஓடும் சூரியனை பார்த்தபடி, 
இது கடைசி பயணமில்லையென்று
தப்பில் தோய்த்த சித்திரங்களாய், தனிமை  
பேசிக் கொண்டேயிருக்கிறது
மௌனமாய்..

விசுக்கென்று உயரும் சேவலின் முகமாய்,
வீசும் காற்றை நாசிக்குள் இழுக்கிறது மனது
கடந்துக் கொண்டிருக்கின்றன கோபுரங்கள் 
வைக்கோல் படப்பை மூடிய பிறிகளின் இழைகள்  
காற்றைவிட்டு பிரிந்து முகத்தில் அறைகின்றன  
உறையாத நீரின் மீது வாத்துக்கள் கால் பாவுகின்றன 
வானம் மையிட்டு சூரியனை உண்ணத் தொடங்குகிறது 
களைப்பில் உதிர்ந்து விழுகின்றன  பயண பைகள் 
இது கடைசி பயணமில்லையென்று 
மூடிய கண்களுக்குள், தனிமை 
பேசிக் கொண்டேயிருக்கிறது 
மௌனமாய்..


3 comments:

  1. வணக்கம்
    அழகிய கற்பனை அழகியவரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. முயற்சிகள் தோற்கும் வரை நம்முடைய பயணங்கள் முடிவதில்லை கூடவே நம்முடைய பணிகளும் முடிவதில்லை

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....