முழித்திருந்த புற்களை எல்லாம் எண்ணிவிட்டு
விடியலின் எழிலை இல்லாதொழித்த கரும்புகை வண்டியொன்றை கண்டு
இருந்த இடம் பெயர்ந்து
கொன்றைமரக் குச்சியொன்றில் குத்திட்டு, கூக்குரலிட்டு
சுண்டக்காய்ச்சிய குழம்பில் குழைத்த
பிழிந்தெடுத்த சோற்றுப் பருக்கைகளுக்காய்
என்னை அழைக்கும்,
பொருள் பொதிந்த உன் தேடல்கள்
அன்னியமாய்படுகிறது எனக்கு.
எங்கேனும் வானம் பிரிந்த சூரியன் உண்டா, சொல்..
மாசி பிறந்தும் விலகாத, வாடை காற்றை விலக்கி
பின்கட்டு திறந்து, உனக்கான பிடி உருண்டையை,
பழுப்பு இலைகளால் ஆரவாரப்படும் கிணற்றின் பக்கமாய்
வைக்காமலா வருவேன்..
எச்சமிடாமல் சாப்பிட்டு போ..
கிணற்று நீரை தவளை குடித்துக் கொண்டிருக்கிறது..
ரசித்தேன் சகோதரி...
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteகிணற்றுத்தவளைக்கும் இரங்கும் மனம் அழகு.
ReplyDeleteநன்றி கீதா
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி குமார்
Delete