Tuesday, 13 January 2015

காவலற்று..



இதயசுவரை சுருக்கவும் விரிக்கவும் வழியொழித்து
கற்கள் அடுக்கி அழகு பார்த்தாய்
கல்லறை அமைத்து, கடுந்தொலைவு சென்றுவிட்டு
காற்று சுமந்து வருகிறாய்
இவ்வமயம்..

கண்ணீரின் சாரலுக்காய்
மேகம் தொட்டு திரும்பும்
என் விதி வலியது..
அது காற்றுக்கு மசிவதில்லை..

சிலந்தியின் கூடாய் உருமாறி
பரிகசிக்கிறது பகலவனையே..

இருந்தும்,
கண்களை காவலற்று வைத்திருக்கிறது
கண்ணீரின் சுவைக்காக..


7 comments:

  1. காவலற்று என்ற வார்த்தையே சுகமாயிருக்கு.

    ReplyDelete
  2. அருமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கவிதை அருமை.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி..வாழ்த்துக்கள்

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....