முழ்கியெழுந்த பாதச்சுவடுகள்
கரை தழுவி நடக்கையில்
யாக்கையின் நிர்வாணம்
நிலவின் முன் நிர்ச்சலனமாய் விரிய,
வனாந்தரத்தில் சருகுகள் கருகத் தொடங்கியிருந்தன
விசும்பலின் ஒலி இப்போது சுவடுகளிடமிருந்து
அதில் மீந்த துளிகள்
மீன்களின் வசிப்பிடமாகின..
வறண்ட பாதங்கள் மட்டும்
வனப்பின் வடிவம் தாங்கியபடி
நடந்துக் கொண்டிருந்தன..
அழகிய கவிதை .. படமும் சூப்பர்
ReplyDeleteநன்றிங்க..
Delete