அரையில்
சிறு ஆடையுடன்,
சாலையில்
மண்ணின் சிவப்புடன்
யுத்தம் செய்துக் கொண்டிருந்தான்...
வியர்த்திருந்த ஆகிருதியில்
ஆணின் வாசனை...
நுகரும் தென்றலுக்கு
புயலாகும் அமைப்பு...
கைகளில்லா காமம் நீட்டி
பருகிச் சென்ற பெண்மையை
தின்றுக் கொண்டிருந்தான்...
கடக்கும் கண்களை
பெருமூச்சை காற்றாக்கி
பகலில் கனவு சுமக்கச் செய்தான்...
புற்களையும் கற்களையும்
வருடிவிட்டு செல்லும் நதியாய்
நனைத்து,
பின்
நீங்கி நின்றான்...
இன்னும்
ஏதுமறியாதவனாக
மண்ணுடன் மட்டுமே
யுத்தம் செய்துக் கொண்டிருந்தான்...
"அறையில்" என்று வருமோ...?
ReplyDelete