Saturday, 27 December 2014

அரிமா சக்தி விருது - சிறந்த பெண் படைப்பாளர்களில் ஒருவராக நானும்..

 திருப்பூர் அரிமா சக்தி விருது 


சந்தோஷமான விஷயம்...
சிறந்த பெண் படைப்பாளர்களில் ஒருவராக நானும் என் எழுத்துக்காக 'அரிமா சக்தி விருது' பெற்றேன் என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 

திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் சார்பாக படைப்பாளிகளுக்கான விருது டிசம்பர் 25, 2014 அன்று திருப்பூர் அரிமா சங்க வளாகத்தில் வைத்து விழா எடுக்கப்பட்டு வழங்கப்பட்டது.





அதில் குறும்படம் / ஆவணப்படத்திற்கான விருதுகளும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

விழாவின் தொடக்கம் சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கியது. விருது பெற்றவர்களை பேச அழைத்திருந்தனர். சென்னையில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் பெண்மணிகள் வந்திருந்தனர். அவரவர்களின் எழுத்தின் அனுபவங்களைச் சொல்லிச் சென்றனர்.


  


நானும் சற்று பேசிவிட்டு வந்தேன். பெண்கள் வீடு தாண்டி, சமூகம் தாண்டி எழுதிவருவதையும் அதற்கான விருது என்பது அவர்களுக்கு ஒரு மகிழ்வும் ஊக்கமும் உயர்வும் தரும் விஷயம் என்பதை சொன்னேன்.




அரிமா கோபாலகிருஷ்ணன், அரிமா செல்வராஜ் மற்றும் அரிமா உறுப்பினரும் எழுத்தாளருமான சுப்ரபாரதி மணியன் ஆகியோர் வந்து விழாவை சிறப்பித்தனர்.

சுப்ரபாரதி மணியன் அவர்கள் அனைவருக்கும் விருது வழங்க விழா இனிதே நிறைவுற்றது.





விருது வாங்கியவர்கள் பட்டியல் :

அரிமா குறும்பட/ ஆவணப்பட விருது  :
1.  சாரோன், சென்னை( பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் )
2. யுகபாரதி புதுவை( தீதும் நன்று பிறர்தர வாரா )
3. நம்மூர் கோபிநாத், சென்னை(  why why    )
4.மதரா , திருனெல்வேலி ( கதவு  )
5. கே.பி.ரவிச்சந்திரன் கரூர் ( விழிகள்” )

சிறப்புப் பரிசு  : திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளுக்கு
1. சபரீஸ்வரன்,
2. சி.கோபிநாத்
3. பைரவராஜா

அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )
  • விஜயலட்சுமி சுந்தர்ராஜன் ( நாவல் ). கோவை
  • இடைமருதூர் கி.மஞ்சுளா, சென்னை (நாவல்)
  • ஸ்ரீஜாவெங்கடேஷ்சென்னை( நாவல் )

  • அகிலா , கோவை, (கவிதை )
  • தேனம்மை லட்சுமணன் (ஹைதராபாத்)-கவிதை   
  • மாதாங்கி சிங்கப்பூர்- கவிதை.
  • கவுதமிகோவை -கவிதை       
  • சுஜாதா செல்வராஜ் பெங்களூர் கவிதை. 

  • கவுரி கிருபானந்தம், சென்னை ( மொழிபெயர்ப்பு)
  • ராஜேஸ்வரிகோதண்டம்ராஜபாளையம்  (மொழிபெயர்ப்பு )  
  • சாந்தாதத், ஹைதராபாத் (மொழிபெயர்ப்பு)    

  • எம் எஸ் லட்சுமி, சிங்கப்பூர்(கட்டுரை)
  • இந்திராபாய்சென்னை ( கட்டுரை )
  • ஈஸ்வரி, கோவை (கட்டுரை) 
  • சுபாஷிணிசென்னை, (கட்டுரை)     
  • சவுதாமினி , தாராபுரம் (கட்டுரை) 
 
  • ஜெயஸ்ரீ சங்கர்(ஹைதராபாத்) நாவல்
  • மைதிலி சம்பத்  (ஹைதராபாத்), நாவல்
  • வனஜா டேவிட் , பெங்களூர் நாவல்        



  • ராமலட்சுமி  , பெங்களூர், - சிறுகதை
  • பாலசுந்தரிதிருவாரூர்(சிறுகதை )   
  • கமலா  இந்திரஜித்.திருவாரூர்(சிறுகதை )



9 comments:

  1. சகோதரிக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள். மேலும் மேலும் விருதுகள் குவியட்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கு நன்றி...

      Delete
  2. வணக்கம்

    சகோதரி இன்னும் பல விருதுகள் பெற எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இது ஒரு சந்தோசமான தருணம். உங்களை மேலும் உற்சாகமாக எழுத வைக்க இந்த விருது இன்னும் தூண்டும். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக எனக்கு ஊக்கசக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி நண்பா..

      Delete
  4. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்..

      Delete
  5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....