Saturday, 20 December 2014

அவகாசமிருக்கிறது..





கண்ணெதிரே,
மனித உடல் சுமக்கும் அமரர் ஊர்தி

அதன் பின்பாதியில்
தனித்துவிடப்பட்ட நீண்ட பெட்டியொன்று
சட்டமிட்டு பூட்டப்பட்டு கிடக்கிறது
அதனுள்,
மீளாத்துயிலில் சரீரம் ஒன்றும்
இருக்கலாம்..

சாவின் மீது பயமில்லையென
உரக்கக் கூச்சலிடுகிறது மனம்

உடலின் மீதான ஆக்ரமிப்புக்களுக்கு
நெருப்பென்றும் புழுக்களென்றும் மின்சாரமென்றும்
பெயரிட்டு, அச்சத்தை
அறுவடை செய்கிறது மனது

நெருப்பென்கிறது நமது சாத்திரம்
வாசனை திரவியம் என்கிறது அயல்சாத்திரம்
எதை கொள்வதென
பிரளயமாய் சலனம் எழுகிறது..

தேர்ந்தெடுக்க அவகாசமிருக்கிறது,
அடுத்த நிமிடம் வரை..  


3 comments:

  1. சூப்பரா இருக்கு.. இன்னும் அவகாசம் இருக்கிறது. அடுத்த நிமிடம் வரை. ரசித்தேன்...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....