Tuesday, 2 December 2014

காலமறியாமல்..


உதயமின்றி வானம் வெளுத்திருக்க
புதர்களில் சிறகுகளின் ஆலோபனைகளுடன்
தலையில் உறையிட்டுக் கொண்டு
உலா போகும் மனிதர்கள்..

குல்மோஹரின் மஞ்சள் பூக்களெல்லாம் உதிர்ந்த நிலையில்,
மொட்டவிழ்ந்த கொய்யா மலரொன்று
பனி கொண்டு முகம்துடைத்து சிரித்தது

காலமறியாமல்..


4 comments:

  1. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ”பனி கொண்டு முகம் துடைத்து” - அருமை! அருமை! நன்றாகவே இயற்கையை ரசித்து இருக்கிறீர்கள். அது எனன, குல்மோஹர் மஞ்சள் பூ? நான் பார்த்ததில்லை.

    ReplyDelete
  3. வணக்கம்
    கற்பனை வளம் சிறப்பாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. சூப்பர்மா... வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....