வருடம்தோறும்
வலிகள் இறக்கின்றன
தோள் சுமக்கும் ஆவிகளின் கேள்விகள்
கல்லறைக்கு என்றும் இல்லை..
கற்பழிக்கப்படும் இருதயத்தின் மூச்சு
கடைசி தருணமாய் உன்னையே கொள்கிறது
விலகல்களை இழுத்து நிறுத்தி
வலிகளை ஏப்பமிடுகிறது மனது..
கடிப்பட்டு வழியும் இரத்தத்தின் வாடைக்கு
கழுகுகள் வட்டமிடுகின்றன
வேதாளங்கள் இறந்துப்போய்
விக்கிரமனின் தோளில்
அவற்றின் சட்டைகள் மட்டும் தொங்குகின்றன..
அருமை.
ReplyDeleteநன்றி.
Good. Very Nice. :-) . Sila lines purila. Vadukkal?
ReplyDelete