என் சிந்தனைகளின் சாரலாய் ஒரு வலைப்பூ தொடங்கியிருக்கிறேன். இதில் நம் ஆழ்மனதின் வெளிச்சம் தேடும் முயற்சிகளை அலசத் தொடங்கியிருக்கிறேன் உங்களின் ஆதரவுடன்...
இந்த புதிய எனது வலைப்பூவையும் உங்களின் பிடித்த வலைப்பூவாய் இணைத்து மகிழுங்கள்
இந்த என் http://www.ahilas.com வலைப்பூவிலும் ஒரு 'சாரலில்' என்னும் பக்கமிட்டு அதில் அந்த வலைப்பூவை இணைத்திருக்கிறேன்...
தேடலில்
உலகத்தின் எந்த வேறுபாடுகளுக்காகவும் நான் காத்திருக்கவில்லை. நீரின் மேல் இட்ட கோடு உடனே அழியும். அது கண் விட்டு மறையும் நேரம் கூட காத்திருப்பதில்லை. அதுபோல எந்த வேறுபாடுகளுக்காகவும் நான் விழித்துக் கொண்டிருக்கவில்லை. தோன்றி மறையும் சில மாயங்களில் ஒன்றாகவே சரீரத்தையும் அதனுள் உறைந்திருக்கும் ஆன்மாவையும் காண்கிறேன்.
காத்திருப்புகளை நான் நம்புவதில்லை. புத்தனின் மீதான என் நம்பிக்கை கூட ஒரு வகையில் காத்திருப்பையே காட்டுகிறது. என் வழியில் புத்தனைக் காண விழையும் மனதின் ஆசையை அடக்குகிறேன். அவனின் புத்தமின்றி என்னுள் புத்தம் தேடத் தொடங்கிவிட்டேன்.
Read More
கேள்விகள்
தேடலின் வழிகளின் மேல் வரைபடங்களாய் நிறைய கேள்விகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயங்களாய் சில பதில்கள் அதில் பதிக்கப்படும். மௌனங்களாயும் பலவற்றிக்கு விடையளிக்கப்படும். பதிலில்லாதவை தேவையற்றதாகிப் போய்விடும். அவற்றுள் சில பின்னொரு நாளைக்காக கூடுகட்டும்.
நான் விடைகளின் மேல் அதிகமாய் கவனம் வைப்பதில்லை. முலாம் பூசப்பட்ட பொய்களாவே அவை அமைந்துவிடுகின்றன. வெறும் தலையசைப்பிற்கானதாகவே இருக்கும். அவை மௌனத்தை மேலானதாக்கிவிடும். மௌனம் தாண்டிய வெற்றிடங்கள் பலகீனத்தின் தூக்கத்தை கலைத்துவிடும் சாத்தியக்கூறுகளை சுமந்திருக்கும். .
இதோ செல்கிறேன்... புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteநன்றி தனபாலன்...
Deleteவாழ்த்துக்கள்! சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்...
Delete