இன்றைய
விடியலின் முகத்தை
உன் முகமாக்கினாய்
உயிரை பிரித்து
உடலை இங்கிருத்தி விட்டு
நீ விட்டுச்சென்ற
வாழ்க்கையில்
உன் பதவியின் கனம்
எனதாகிப்போனது
என் பின் பிறந்தோர்க்கு
நீ இருந்த பொழுதுகளில்,
சன்னல் தொட்ட காற்றை
திரைசீலையுடன் மட்டுமே
பேசச் செய்தாய்
எண்ணெயிடாத என்
தலைமுடியை
பூவைத்து பின்னலிட்டு
இறுக்கினாய்
ஜார்ஜெட் தாவணிக்கு கூட
கஞ்சி போட்டு
என் இடுப்பில்
சொருகினாய்
அம்மா,
நீ இட்டவை
இலட்சுமண கோடுகள்தான்
சில அத்துமீறல்களுடன்
தாண்ட முயற்சித்து
வென்றும் தோற்றும்
பயணப்பட்டிருக்கிறேன்
பிள்ளைகள் பெரிதானால்
பின்னலிடாமல்
கொண்டையிடும்
உன்னைப் போல்
நான் இல்லைதான்...
இருந்தும்,
அன்பில்
நான்
உன்னை போலவே
என்றும் இருக்க
#பின்னலிடாமல் கொண்டையிடும்
ReplyDeleteஉன்னைப் போல்
நான் இல்லைதான்...#
கோலம் மாறலாம் ,காலம் மாறலாம் ,கொண்ட தாய் அன்பு குறையவே குறையாது !
உண்மைதான்...நன்றி நண்பா...
Deleteசிறப்பான நற் சிந்தனைகள் அடங்கிய முத்தான கவிதைக்கும்
ReplyDeleteஉங்களுக்கும் என் இனிய மகளீர் தின வாழ்த்துக்கள் தோழி .
உங்களுக்கும் என் வாழ்த்துகள்...நன்றி...
Deleteஅம்மாவின் நினைவை அழகாகச் சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteஅம்மாவின் அன்புக்கு எதுவும் ஈடில்லை.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அம்மா என்பவள் ஒரு பெண் பிள்ளையின் தெய்வம் தான்.
Deleteசிறப்பிற்கு மேலும் சிறப்பு... வாழ்த்துக்கள் சகோதரி....
ReplyDeleteநன்றி தனபாலன்...
Deleteசகோதரி அவர்களுக்கு உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.!
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்கு நன்றி...
Deleteஎன் தாயை நினைத்து சில கணங்கள்
ReplyDeleteமெய்மறக்கச் செய்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தாயின் நினைவுகள் என்றுமே அழியாதவை....நன்றி அய்யா...
Deleteஅம்மா நீ மழையாய் பெய்த பாசம் நீ சென்ற பிறகு என்னுள் சிறு துளியாய் உருண்டு அதே பாசத்தின் சாராம்சத்தோடு என்கண்களில் அந்த கண்ணீரில் நான் நனைந்து என்னில் உன்னை பாகிறேன் ...வரிகள் அருமை ..
ReplyDelete