குருவாயூர் என்றதும் கிருஷ்ணர் கோவிலும் அதன் பிரகாரம் சுற்றும் யானைகளும் நம் நினைவுக்கு வருவது வழக்கம்.
ஸ்ரீ கோவில் நடை சாத்தும் நேரம் விளக்கு ஏற்றி சாமியை யானை மீதேற்றி உலா வரும் நேரம் சீவெளி (Seeveli) ஆகும்.
கோவிலை சுற்றி மூன்று முறை நடைபெறும் இந்த சீவெளியின் சிறு ஒளிச்சித்திரம் இது :
(http://www.youtube.com/watch?v=OJQKA-_KtAY)
அன்று சாமி தரிசனம் முடித்து சீவெளி பார்க்க நின்றிருந்தேன். யானைகளின் அழகான தரிசனம், தன் மேல் அமர்பவர்களுக்கு கால் மற்றும் வால் சுருட்டி கொடுத்து தூக்கிவிடும் அதன் பழக்கம் எல்லாமே எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும். கண்டிப்பாக ஆனக்கோட்டா (Anakkotta) செல்ல வேண்டும் என்கிற நினைவும் வந்தது.
நான் ஒவ்வொரு முறை குருவாயூர் சென்று வரும் போதும் அங்கு சென்று யானைகளைப் பார்க்காமல் திரும்புவதில்லை.
குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான யானைகள் புன்னதூர்கோட்டாவில் உள்ள குறுநில மன்னரின் அரண்மனை தோட்டத்தில் பராமரிக்கப்படுகின்றன. இந்த இடம் குருவாயூரிலிருந்து இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. வாகனம் நிறுத்தும் வசதி உள்ளது.
பார்வை நேரம் : காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை (8 am to 5.30 pm)
கட்டணம் : 5 ரூபாய், கேமரா 25 ரூபாய் (Entry Fee : Rs 5/adult, Rs 25/camera)
இங்கு 66 யானைகள் உள்ளன. உணவு, குளித்தல் என எல்லாமே இங்குதான். அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கும் யானைகளின் அருகில் மட்டும் நம்மை விடுவதில்லை. மற்றபடி அந்த தோட்டத்தின் உள்ளிருக்கும் சாலை வழியே நாம் நடந்து சென்று பார்க்கலாம்.
எந்த யானையும் சோம்பேறியாய் இருப்பதில்லை. எதையாவது அசை போட்டுக் கொண்டேயும் அசைந்துக் கொண்டும்தான் இருக்கிறது. அவற்றின் பெரிய தந்தங்கள் முனைகளில் உடைத்துவிடப்பட்டிருக்கின்றன.
இங்கு 'நாலு கட்டு' என்னும் அரண்மனை வீடு நடுவில் ஆலோசனை கூடத்துடன் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. அது இப்போது பாகன்களின் பயிற்சி கூடமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்குள் வேட்டைக்காரன் சாமியும் உள்ளது.
வேட்டைக்காரன் சாமி
பலமுறை சென்றதுண்டு... அனைத்து படங்களும் அருமை சகோதரி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்...
Deleteபடங்களும், தகவல்களும்
ReplyDeleteமிக அருமை..
மிக்க நன்றி மகேந்திரன்...
Deleteசிறப்பான படங்களும் செய்திக்கும் நன்றி
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteஅருமையான தகவல் தொடரட்டும் உங்கள் ஊர் சுற்றும் வாலிபி(வாலிபன் ஆபோசிட் ) பணி நாங்களும் நிறைய விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொள்வோம் படங்களும் தொகுப்பும் மிகவும் அருமை
ReplyDeleteநன்றி ராஜன். நான் போய் பார்த்து வந்தவைகளை மட்டுமே இங்கு பகிர்வேன்.
Delete