Friday, 21 February 2014

வலைப்பதிவர்களாய் பெண்களாகிய நாங்கள்...

வலையுலகில் கோவை பெண்கள்...





இன்றைய தி ஹிந்து நாளிதழில், மெட்ரோ பிளஸில் வலைப்பதிவு உலகில் என் முயற்சி பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. என் தோழி எழிலும் (http://nigalkalam.blogspot.in/) இதில் உண்டு என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

படித்துப் பார்க்கவும் :
http://www.thehindu.com/sci-tech/technology/internet/blog-by-blog/article5709804.ece




சிறுவயதில் இருந்தே பக்கம் பக்கமாக டைரி எழுதுவது வழக்கம். ஒரு நாளின் பதிவுகளை அந்த பக்கம் நிறைத்து அடுத்த தேதியின் பக்கத்தில் ஒரு கட்டம் போட்டு எழுதுவேன். எழுதும் அந்த பழக்கம்தான், இன்று என்னை வலைப்பதிவு (Blog) உலகில் நிமிர்ந்து நிற்க உதவியது.

2004 யில் ஆரம்பித்த இந்த வலைபதிவு எழுத்துகள் என் காகித கணக்கை சற்று குறைத்துவிட்டது என்னமோ நிஜம்தான். எனினும் நான் மட்டுமே படித்துவந்த என் எண்ணங்களை இன்று அனைவரும் படித்து ரசிக்க வைத்து, என்னை மேலும் மேலும் எழுத தூண்டியது இந்த வலைபதிவு உலகம்தான்.

இதை படிப்பதோடு நிறுத்திவிடாமல் நீங்களும் உங்களின் எண்ணங்களை எழுத்துகளாக்கி அனைவரும் படிக்க உதவலாம். உங்களின் பயண அனுபவங்கள், சமையலின் வாசம், குழந்தைகளை வளர்ப்பது என்று எத்தனையோ அனுபவங்களை எழுதிச் செல்லலாம். ஓய்வு கிடைக்கும் நேரங்களில் மட்டுமல்லாமல் ஓய்வை ஏற்படுத்தி கூட வலையில் உங்களை பதிக்கலாம்.

அங்கு எழுதும்போது உடனுக்குடன் இங்கு போல் பதில் வராதுதான், ஆனால் வாக்குவாதங்களும் சண்டைகளும் ஒருவரை ஒருவர் தூற்றுவதும் விலக்குவதும் அங்கு கிடையாது. என்றும் உங்கள் தளத்தில் நிலைத்து இருக்கும் உங்களின் எழுத்துக்கள் உலகத்தின் இருக்கும் உங்களின் நட்பில் இல்லாதவர்களைக் கூட படிக்க வைக்கும்.

வலைபதிவு தொடங்கி உங்களின் எழுத்துக்களையும் பதியுங்கள்...
www.blogger.com

17 comments:

  1. வாழ்த்துக்கள் மேடம்ஸ்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  3. அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்...

      Delete
  4. வாழ்த்துக்கள்! இணைப்பிற்கு சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. படித்து பாருங்கள்...நன்றி சுரேஷ்...

      Delete
  5. வணக்கம் !
    வாழ்த்துக்கள் சொந்தங்களே உயிராம் தாய் மொழி தினமான
    இந்நாளில் தங்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றேன் !

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கு நன்றி...

      Delete
  6. வாழ்த்துக்கள் அகிலாஜி!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு என் நன்றி நண்பா...

      Delete
  7. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அய்யா...

      Delete
  8. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா...

      Delete
  9. சுடச் சுட செய்தி வந்திருக்கிறது....உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....