Friday, 17 January 2014

உருவமற்ற கோபம்...



ஏதோ ஒரு வாசலின் வழி 
இயலாமையின் இழுப்பிற்கு உடன்பட்டு 
உட்புகும் 
உருவமற்ற அதன் நீட்சி...

குதிருக்குள் வழிதேடும் சுண்டெலியாய்
அங்கும் இங்குமாய் 
அடங்கா அலையும்... 

அரைக்கண் பார்வைகளையும் 
அழுகையாய் சித்திரங்களையும் 
சிலநேரம் விட்டுச் செல்லும்... 

சீண்டிய காரணிகளை 
திசையெங்கும் தேடியோடும்... 

மிதிபடும் சருகுகளில் 
பாதம் கிழிபட 
மனியடித்துத் திரும்பும்... 

கண் திறந்தே உறங்கிப்போகும் 
உருவமற்ற அதன் நிழல்...   

10 comments:

  1. கவிதை அருமை.
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  2. பல சமயம் இயலாமையில்
    உறங்குவது போலவும் நடிக்கும்

    உருவ மின்மையை உருவப்படுத்தி
    கவிதையாக உலவ வைத்தது அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான் அய்யா...நன்றி...

      Delete
  3. அருமை...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  4. ஆம்.வாழ்க்கை.வாழ்கையில் நீண்ட தடம்போல அப்பப்ப கடந்துபோகும்.மீண்டும் மீண்டும் தேடிச்செல்லும்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்....அந்த உருவமற்ற கோபங்களும் நியாயம்தான்...

      Delete
  5. மிக்க நன்றி...

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....