உதிர்ந்து விழுந்த சில
நாட்துளிகளுள்
தன்னை
அடையாளப்படுத்திக் கொண்டன
மாலை நேரத்து தேநீருடன்
மழைக்கணங்கள்...
மூங்கில் திரை தாண்டிய
சாரலின் மிச்சங்களை
கோப்பையின் சுற்றுவட்டத்துள்
சுமந்து
அதன் முத்தம் தொட்ட
ஊதாநிற காகிதப்பூக்களை
கட்டமிட்ட தரையெங்கும்
கொட்டி
முற்றத்து ஊஞ்சலாய்
மனதை ஆட்டிவிட்டு
வடிந்து சென்றுவிட்டன
ஈரப்படுத்திய இதழ்களை
எடுத்துக்கொண்டு...
அருமை.அருமை...!
ReplyDeleteநன்றி தனபாலன்...
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க நன்றி குமார்...
Delete