Friday, 4 October 2013

சாளரத்தின் பதில்...




அசைக்கவே முடியாத வழித்தடங்களாய்   
மாறிப்போன மரத்தின் வேர்கள், 
விழுதுகளை சரி நிறுத்தி 
தாங்கிக் கொண்டன இலைகளின் பாரத்தை... 

கிளைவிட்டு அடைத்து மெழுக
ஒரு நீலவானமே தேவைப்பட்டது...
மேலே நட்சத்திரங்களின் கண்சிமிட்டலில்
சொட்டாய் வழிந்த நீர்த்துளிகள் 
நிலாக்களைக் காட்டிச் சென்றன... 
தொட்டு வீசிய வாடைக் காற்று  
சட்டென்று திறந்துவிட்டது சாளரத்தின் பாதியை...

கருப்பின் நிழலை வறுமையாக்கி
வானின் வெளிச்சப் பூக்களை உள் தெளித்து 
முத்தமிட்டுக் கொண்டிருந்தது, 
அறை முழுவதும் 
ஊமையாய் படர்ந்திருந்த இருளை...
   
இன்னும் 
மூடுவதும் திறப்பதுவுமாக
காற்றின் அசைவுக்கு
நடந்துக் கொண்டேயிருக்கிறது 
சாளரத்தின் பதில்...  


6 comments:


  1. மூடுவதும் திறப்பதுவுமாக
    காற்றின் அசைவுக்கு
    நடந்துக் கொண்டேயிருக்கிறது
    சாளரத்தின் பதில்...

    அருமையான வரிகள் அக்கா....
    கவிதை அருமை...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி குமார்...

      Delete
  2. //அறை முழுவதும் ஊமையாய் படர்ந்திருந்த இருளை...// ;)

    சாளரத்தின் பதில் அருமை. நல்லதொரு ஆக்கம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்களுக்கு...

      Delete
  3. நன்றி நண்பா...

    ReplyDelete
  4. மன ஓட்டத்தின் வரைபடம் கவிதை அழகாக செதுகபட்டுள்ளது அருமை

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....