என்னைக் கடந்து
நடந்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்...
சின்ன ஜரி தெளித்த பட்டும்
வெள்ளை வேட்டியும் பட்டு சட்டையுமாய்
அவளும் அவனும்...
நெற்றியில் விழும் மல்லிகைக் கூந்தலை
தள்ளிவிடும் கை நளினமும்
அந்த பூங்கொடியைத் தொடாமலேத் தொட்டு
சாய்ந்தக் கோடான அவனின் நடையும்...
சின்னதான அவனின் உதட்டசைவுக்கும்
குறும்பை கண்களில் தேக்கிய
அவளின் சிறு இதழ் விரிந்த சிரிப்பும்...
காட்டியதே புதுமணம் தான் என்பதை...
தேர்ந்தெடுத்த படமும், அதற்குப்பொருத்தமான பாடலும் அருமை.
ReplyDeleteபுதுமணம் தான் ......மணம் வீசுகிறது. ;)))))
பாராட்டுக்கள்.
மிக்க நன்றி ...
Deleteஅருமை...!
ReplyDeleteநன்றி ...
Deleteபுதுமணத்தம்பதியிடம் காணும் நளினமான விலகல் நெருக்கத்தை அழகாகக் கவிதைப்படுத்தியிருக்கீங்க அகிலா
ReplyDeleteநேரில் பார்த்ததன் விளைவு அப்படி அழகாய் தானே வரும் எழில்...
Deleteஅன்பின் அகிலா - புது மணத் தமபதிகளைன் படமும் கவிதையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி நண்பா...
Delete