Monday, 19 August 2013

ஏணியாய்...



மின் வேலை செய்யத் தான் வந்தான் அவன்...

அவனுக்காகவே தைக்கப்பட்டதுப் போல்  
நிறையப் பைகள் வைத்த நீலவண்ண காற்சிராய்
அவனுடைய வேலைக் கருவிகளின் அஞ்சறைப் பெட்டியாய்  
அதன் மடிப்புகளில் அழுக்கு அடைந்திருக்கிறது...

முக்காலி மேல் முக்காலி அடுக்கி
அதன்மேல் விந்தையாய் விழாமல் நிற்கிறான்...

இட்லிக்கும் தேநீருக்கும் வயிறு சற்று உப்பியது
அவ்வளவே...
மற்ற நேரம் மெலிந்தே இருந்தான்...

அறிவொளி நகரில் வீடு என்றான்
மின்னறிவு அதிகம்தான்
நூறு போறும்க்கா என்றான்
என்ன செய்வாய் இதை என்றேன்
தம்பிக்கு ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கணும்
என் கணக்கு சரிதான்
இவன் ஏணி தான்...


16 comments:

  1. உண்மை...
    கவிதையின கதாநாயகனைப் இன்றைக்கு போல் எத்தனை இளைஞர்கள் யுவதிகள் ஏணியாய் இருக்கிறார்கள்...

    என்றுதான் தீருமோ வறுமை

    ReplyDelete
  2. பலரின் வாழ்வு இப்படித்தான்... அதுவே சந்தோசம்...

    ReplyDelete
  3. ஏணியாய் வாழ்பவர்களை நிச்சயமாக ஊக்குவிக்கும் உங்கள் கவிதை வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு...

      Delete
  4. ஏணிகள் ஏற்றித்தான் விடுகின்றன. ஏறுவதில்லை...

    நல்ல வரிகள். ரசித்தேன்.
    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.2

    ReplyDelete
  5. ஏணிக்கு ..எளிமையான ஒரு மகுடம் ..

    ReplyDelete
  6. குடும்பச் சுமைதாங்கியை ஏணியாகப் பார்த்ததே சுயமான சிந்தனை.
    சின்னச் சின்னச் சிதறல்கள் -நன்றாகவும் இருக்கும்; சரியானதும் கூட.திரைப்படத்துறையினர்தான் பெயர் வைக்கும்பொழுது எண்களின் ராசி பார்த்து ஒற்றெழுத்துக்களை விலக்கி விடுவர். நமக்கு அது தேவையா?
    வளர்க.வெல்க.

    ReplyDelete
  7. //என் கணக்கு சரிதான்
    இவன் ஏணி தான்...// இப்படி பல ஏணிகள் இருந்ததால்/இருப்பதால் சமுதாயம் முன்னேறுகிறது...அருமையான படைப்பு.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....