Monday, 12 August 2013

பாட்டி...



ஊருக்கு கிளம்பும் 
தன் தங்கைகள் நாத்தனார்கள் 
மகள்கள் மருமகள்கள் பேத்திகள்
ஆகியோருக்கு அடுக்கியிருப்பாள் 
முறுக்கு முதல் ஊறுகாய் ஜாடி வரை... 

தலை சாய்க்கும் இடம் மட்டும் 
எண்ணெயாய்ப் போன வெள்ளைச் சுவற்றில் 
சாய்வாய்க் கால் நீட்டி அமர்ந்திருக்கும் அவளின் 
மார்பு முட்டிச் சாயும் என்னை அணைக்கும் 
அவளின் சேலை முழுவதும் 
வாசமாய் அடுப்பின் புகை...

2 comments:

உங்க கருத்தை சொல்லலாம்.....