கம்பளியில் தலைநீட்டி தூங்கியவனை தொட்டது
உள்ளிழுத்தான் முகத்தை...
கம்பளிக்குக் குளிர்ந்து போனது...
நடந்துக் கொண்டிருந்த பெண்ணின்
சேலை விலக்கிப் பார்த்தது
சட்டென்றுக் கோபப்பட்டாள்...
ஆடு பத்தி வந்தவன்
அதன் வருகை உணர்ந்து
பீடி பற்றத் தொடங்கினான்...
வண்டி மாடுகளின்
மூச்சுக் காற்றும் குளிர
மூக்கணாங்கயிற்றின் மீது உரசிக் கொண்டன...
நானும் ஆடையாய் போர்த்தியிருக்க
உன் மூச்சுக் காற்று நான்தான் என
நகையாடிச் சென்றது....
ஜில்லென...!
ReplyDelete
ReplyDeleteவண்டி மாடுகளின்
மூச்சுக் காற்றும் குளிர
மூக்கணாங்கயிற்றின் மீது உரசிக் கொண்டன...
அருமையான வரிகள்
This comment has been removed by the author.
ReplyDeleteதமிழ்மணம் இணைப்பதேயில்லை...
ReplyDeleteதமிழ்மணம் script-யை எடுக்க தொடர்பு கொள்ளவும்...
dindiguldhanabalan@yahoo.com or 9944345233
நன்றி சகோதரி...
ஊடாடி விளையாடும் ஊதலின் உபயத்தால் கவிதையிலும் குளிர்ச்சி. ரசனைமிக்க வரிகள். பாராட்டுகள் அகிலா.
ReplyDeleteஉவமை அருமை
ReplyDelete