சில இதயங்களின்
உள்ளே பூட்டப்படும் சில காரணங்கள்
இன்னதென்று இல்லாமல் நாளாய் அதற்குள்ளேயே
வதைப்படும்
சொல்லமுடியா வாதனைக்கு பின்
அவை வடிக்காலற்றுப் போகும்...
நிரம்பி வழியும் நீரின் பொங்கும்
பிரவாகமாய்
அவை அமையக்கூடும்...
யாரொருவர் அந்த பிரவாகத்தால் ஆட்கொள்ளப்படுகிறார்களோ
அவர்கள் காரணங்கள் ஏதுமின்றியே மரித்துப்
போகக்கூடும்...
இதற்கும் சலனமற்று போயிருக்கும் அந்த
இதயம்...
அதனுள் அந்த காரணிகளும் கூட அசையாதிருக்கும்...
அழுகலான இவ்வாறான இதயங்கள்
இரக்கமின்றி வதைத்துக்
கொண்டேயிருக்கும் மற்றவற்றை...
ஒதுங்கல்கள் ஏதுமின்றி காட்டாறாய்
ஒழுக்கமற்றுப் போயிருக்கும்....
மனக் கோளாறு என்று மருத்துவம்
பட்டமிடும்
மாற்று மருந்து கூட கிடைக்கப் பெறும்
இதற்கு முன் மரித்துப் போன இதயங்களுக்கு
காரணிகளை மட்டுமே காரணமாக்கிவிட்டு
அந்த இதயம் புதிதாய்
பிறந்திருக்கும்....
கவிதை அருமை...
ReplyDeleteநன்றி குமார்...
Deleteஅருமை.... வேதனைகள் (தானாகவே) வடிக்காலற்றுப் போகும் என்பதும் உண்மை...
ReplyDeleteம்ம்ம்...நன்றி தனபாலன்...
Deleteவலிசுமந்து வந்த கவிதை வரிகள் மனத்தை உருக்கிச் சென்றவிதம்
ReplyDeleteஅருமை ! தொடர வாழ்த்துக்கள் தோழி .நாளை முத்துக்களின்
அணிவக்குப்பு வலைச்சரத்தில் முடிந்தால் வாருங்கள் .மிக்க
நன்றி பகிர்வுக்கு .
கண்டிப்பாக பார்க்கிறேன்...நன்றி...
Deleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நன்றி தனபாலன்...
Deleteஆஹா..அருமை..அற்புதம்..வேறு என்ன சொல்ல...
ReplyDeleteரொம்ப நன்றி(????) ஜீவா...
Deleteவணக்கம் !
ReplyDeleteஇன்று உங்களை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ,அதற்க்குத்
தங்களின் வருகையைத் தெரிவியுங்கள் .மிக்க மகிழ்ச்சி எனக்கும் தங்களை
இங்கே அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பிதற்க்கு .
http://blogintamil.blogspot.ch/2013/07/2_24.html
என் சின்ன தூறல்களையும் இணைத்து பெருமைபடுத்திவிட்டீர்கள்...நன்றி தோழி...
Deleteகவிதை அருமை... அருமை... :)
ReplyDeleteஉங்களின் வலைத்தளத்திற்கு நான் முதல் முறையாக வருகிறேன்..
அன்புடன்: S. முகம்மது நவ்சின் கான்
நன்றி நவ்சின் கான்...என் மற்ற கவிதைகளையும் படித்து பாருங்கள்...பிடிக்கும் என் நம்புகிறேன்...
Deleteதொடர்பதிவு :
ReplyDeletehttp://nigalkalam.blogspot.in/2013/07/blog-post_29.html
தொடர வாழ்த்துக்கள்...
உங்களை பாராட்டியே ஆகவேண்டும் தனபாலன்...முதலில் எல்லாவற்றையும் படித்து பார்க்க ஒரு பொறுமை வேண்டும். பிறகு பாராட்ட மனது வேண்டும்...உங்களின் இந்த தொகுப்பில் என்னுடைய வலைப்பூவையும் சேர்த்ததற்கு நன்றி...
ReplyDelete