Wednesday, 5 June 2013

அணில்....




பரந்து விரிந்திருந்த
அந்த பெரிய மரத்தின்
சிறு கிளையொன்றில்
ஓர் அணில் பிள்ளையால் உண்டாகும் சலசலப்பு
நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது...  

அசைவுகள்
அதன் சிறு கிளைகளிலும் இலைகளிலும்
பயணிக்கிறது தொடர்வண்டியாய்.... 

அவை உள் நோக்கி பயணிக்கையில்  
கிளைகள் தவிர்த்து இலைகளில் மட்டுமே சலசலப்பு...
பக்கவாட்டில் என்றாகும் போது  
சிறு கொம்புகளின் ஆட்டங்கள் கூட அதிகமாகவே...

புரிதலின் பயணங்களும் அப்படிதான்...

மனம் நோக்கிய பயணத்தில்  
கோபங்களும் ஆர்ப்பரிப்புகளும் அடங்கி
புரிதல் சாத்தியப்படுகிறது....

மனம் விடுத்த பயணத்தில்
சலசலப்புகள் உரசல்களாகி
புரிதல் புறக்கணிக்கப்படுகிறது....

எங்காயினும் புரிதல்கள்
பயணங்களை சார்ந்தே அமைந்துவிடுகிறது...




6 comments:

  1. ஒப்பிட்ட விதம் அருமை...

    சலசலப்புகள் உரசல்களாகி விட்டபடியால்... அது முழுமையான புரிதல் இல்லையாதலால்... பயணங்கள் பயணிக்கிறது தொடர்வண்டியாய்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  2. அணில் படம் அழகு.

    //சலசலப்புகள் உரசல்களாகி புரிதல் புறக்கணிக்கப்படுகிறது....//

    அழகான வர்ணனை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. யதார்த்த மனவெளியைச் சித்தரிக்கும் போக்கு மெலிதாக இழையோடுவதை நுகரமுடிகிறது. வாழ்வின் வெறுமையான,கனமான பகுதிகளைத் தொட்டுச்செல்லும் வரிகள் அருமை அதைவிட மனதினை குரங்குடன் தான் ஒப்பீடு செய்து கேட்டு இருக்கிறேன் ஆனால் அணிலுடன் ஒப்பீடு புதிய விஷயம் ..

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....