Sunday, 16 June 2013

நதியே....




நதியே,
மௌனத்தைச் சுமந்து நகரும் உன்னின் நிஜம் கொண்டு
என் பருவம் தொட்டு தழுவி,  
அழகின் நிஜம் சுமந்த என் உருவின் நிழலை பிரதியெடுத்து
எங்கோ இழுத்துச் செல்லப் பார்க்கிறாய்...  

கருவின் முடிச்சு தேடும் தாயின் அவஸ்தை போல்
மேனியெங்கும் என்னை தேடி அலைகிற தாக்கத்தில்    
நொடிக்கொரு முறை மாறும் உன் சுழலில்
என் நிஜம் அகப்படுமென்ற உண்மை மறுக்கப்படுகிறது...

அலையும் உன் பார்வை என் அடி தொடலாம்
மனம் தொட்டு திரும்புதல் இயலாது...

ஆழத்தின் வேர்களை என்னுள் நுழைத்துப் பார்க்கிறாய்  
என் மையலின் காரணியை மட்டும் கண்டுப்பிடிக்க முடியாமல்
என்னைக் கலைத்து ஏமாந்து திரும்புகிறாய்
ஒரு சிறு சலசலப்புடன்....  



  

3 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தோன்றும் இடத்தில அமைதியாக இராமல் காதல் மழையால் பெருகி உணர்ச்சி பிழம்பால் சீறி தான் சார்ந்த நிலத்தின் வண்ணத்திற்கு வனப்பை மாறி தனக்கென சுயம் இல்லாமல் இருக்கும் நதியே நீ யாரை அசைத்து பார்க்கிறாய் ...பெண்ணின் அழுத்தத்தை விவரிக்கும் கவிதை

    ReplyDelete
  3. http://maniajith.blogspot.in/search?updated-min=2010-01-01T00:00:00-08:00&updated-max=2011-01-01T00:00:00-08:00&max-results=22

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....