Thursday, 13 June 2013

முகநூல்...
ஏதோ ஒன்றை
ஒவ்வொருவரிடமும் தேடி
அலைப்பாய்ந்து கொண்டிருக்கிறது
இந்த மாய உலகம்...

இச்சைகளையும் ஆசைகளையும்
நட்பென்னும் புனிதத்தில் கரைத்து
வாழ்க்கை நதியை பாவப்படுத்துகின்றது

கட்டுப்பாடுகள் இல்லா இந்த மாயை
காதலைக் களங்கத்தில் தள்ளி
காவியம் புதிதாய் படைத்துக் கொண்டிருக்கிறது

ஆயிரமாயிரம் மாதவிகளையும் கோவலன்களையும்  
அவதானிக்கச் செய்து
கண்ணகிகளைக் காணாமல் செய்கிறது  

கற்பைக் கடைத்தெருவுக்கு இழுத்துச் சென்று
சமாதானமாய் பேரம் பேசுகிறது
கடைசியில் நல்லவன் என்ற போர்வையுடன்                
தெருவில் நடந்துப் போகச் செய்கிறது
வேடிக்கைதான்....
  
கலாச்சார ஆணிவேரின் சாய்வு
உறுதிச் செய்யப்பட்டுவிட்டது...

முகமூடிகள் நிஜத்தைவிட
இந்த நிழலில் அதிகம்...

தூய்மையற்றக் காற்றைக் கூட சுவாசிக்கலாம்
சாளரமற்ற அறையில் சாவை சுவாசிப்பதைவிட....


15 comments:

 1. நல்லாவே சொன்னீங்க போங்க - உண்மையை...!

  வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. உண்மையை உண்மையாகவே...நன்றி சகோ...

   Delete
 2. // முகமூடிகள் நிஜத்தைவிட
  இந்த நிழலில் அதிகம்...

  தூய்மையற்றக் காற்றைக் கூட சுவாசிக்கலாம்
  சாளரமற்ற அறையில் சாவை சுவாசிப்பதைவிட.
  //

  நிஜம் தான் ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜா...

   Delete
 3. காலத்தின் பரிணாம வளர்ச்சி ..ஒவ்வரு பரிணாமமும் அழிந்து புதிய வடிவங்கள் உருவாயின ..இதுவும் புளித்து போய் இதை விட கொடுமையாக உருமாறலாம் ..அபொழுது நாம் இருந்து பார்க்கும் போது இந்த சூழ்நிலை சாதாரணமாக தோன்றலாம் ஆகையாய் யார் வேணும் என்றாலும் எப்படி வேண்டுமானாலும் மாறிகொள்ளட்டும் ,பண்பாடு பாரம்பரியத்தில் உள்ளவர்களை இந்த பரிணாம வளர்ச்சி தாக்க முடியாது ..அழிவு பாதையில் செல்பவர்கள் கடைசில் விழ்வது சாக்கடை நிறைந்த புதைகுழிகளில்.

  ஆனால் பெரிய மனிதன் என்ற போர்வையில் இருக்கும் சிறுமையான மனிதர்கள் அடையாளம் காண பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை

  ReplyDelete
  Replies
  1. புரிதல்தான் தேவைபடுகிறது ராஜன்...

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. உண்மையான வரிகள்

  சூப்பர் நன்றாக சொன்னினிங்க

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா...

   Delete
 6. வரிக்கு வரி ரசனை + நிஜம்! அருமைங்க!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்....நன்றி கணேஷ்...

   Delete
 7. எல்லாமே உலகமயமான இந்த காலத்தில் பாரம்பரிய கலாச்சாரம் என்பது புத்தங்களில் படிப்பதற்கு மட்டுமே என்று ஆகிப் போனது அதனால் இந்த காலத்தில் பேஸ்புக் என்ற புதிய கலாச்சாரம் உலக கலாச்சராமாக ஆகிப் போனது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. அது என்னமோ உண்மைதான்...நன்றிங்க ...

   Delete
 8. வரிசையாக ஒவ்வொரு கவிதையையும் படித்துக் கொண்டு வந்த போது இந்த கவிதையில் வார்த்தைகள் சரியான கட்டுமானத்தில் வந்துள்ளதாக எனக்குத் தெரிகின்றது. ஒவ்வொரு முறையும் எழுதி வைத்து விட்டு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதை படித்துப் பாருங்கள். செதுக்கி மீண்டும் வலையேற்றும் போது சில கவிதைகள் சகாரவர்ம் பெற்றதாக இருக்கும். இதன் காரணமாகத்தான் நான் கவிதைகளில் முயற்சிப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக அப்படியே செய்கிறேன். நேரமின்மையால் சில நேரங்களில் உடனே பதிவு செய்ய நேரிட்டுவிடுகிறது. இந்த கவிதையும் அப்படிதான் நேரடியாக முகநூலில் எழுதியதுதான்.
   நன்றி நேதாஜி...

   Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....