Thursday, 9 May 2013

ஹலோ...ராங் நம்பர்....



கடந்த ஒரு மாதமாகவே எங்க வீட்டு போன் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யுது. நிறைய ராங் நம்பர் அழைப்பா வருது. இதுலே எங்க வீட்டு போன்லே நம்பர் காமிக்கிற டிஸ்ப்ளே வேற வேலை செய்யலை. எனக்கு பொறுமை கொஞ்சம் அதிகம். அதனாலே பொறுப்பா அமைதியா பதில் சொல்லிகிட்டு இருந்தேன். 

அதுல ஒரு பெண்மணி அடிக்கடி கூப்பிட்டுகிட்டு இருந்தார். முதல்ல நாலைந்து தடவை ராமச்சந்திர அண்ணா இருக்காங்களா என்று தெலுங்கு வாடையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அதுவும் சும்மா கேட்கமாட்டார். ரொம்ப பப்பிலி குரலில் பேசுவார். ரொம்ப எரிச்சல் வந்தாலும் அந்த குரலில் உள்ள சந்தோஷம் நம் BP யை கொஞ்சம் குறைத்துவிடும். 

அப்படி ஒரு அண்ணா இல்லை என்று சொல்லி சலித்துவிட்டேன். ஒரு வாரத்துக்கு சத்தமில்லை. நானும் கூட சரியான நம்பரை கண்டுப்பிடிச்சிட்டாங்க போல என்று நினைத்துக் கொண்டேன். இரண்டு நாட்களுக்கு முன் மறுபடியும் அந்த பெண்மணியின் குரல். இந்த முறை அண்ணாவை தேடவில்லை. அதற்கு பதிலாக மீனா தானே என்று ஆரம்பித்து தெலுங்கில் ஏதோ சொன்னார். 


எனக்கு தெரிந்த அரைகுறை தெலுங்கில் 'போன் பண்ணினா வேற நம்பர் போகுது'  என்று அவர் சொல்வது புரிந்தது. (நாங்களும் நிறைய டப்பு படம் பார்ப்போம்ல...).  நானும் தமிழில், 'இது பழைய அதே ராங் நம்பர் தாங்க பேசுறேன்...நான் மீனா இல்லை...'  என்றேன். நோந்துவிட்டார். தனக்கு தெரிந்த தமிழில் 'மன்னிச்சுக்கோங்கோ' என்று சொல்லிட்டு வச்சிட்டார். அப்பாடா ஒரு வழியா புரிஞ்சிகிட்டாரே என்று என் வேலையை பார்க்க கிளம்பிட்டேன்.



இன்று மறுபடியும் போன்... எடுத்தவுடன் ஹலோ என்ற குரல் கேட்டதும் அட நம்ம ராங் நம்பர் தோழிதான் என்று சந்தோஷம் வந்துவிட்டது. சொல்லுங்க என்றேன்....அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. அப்புறம் நம்பர் எப்படி மாறிச்சுன்னே தெரியல...அப்படி இப்படி என்று ஆங்கிலமும் தெலுங்குமாக கதை சொல்லிகிட்டு இருந்தார்.....

'எதுக்கும் உங்க நம்பர் சொல்லுங்க', என்று கேட்டேன். ஏன்னு கேட்கவேயில்ல. கொடுத்துட்டார்...உங்க நம்பர் என்கிட்டே இருக்குன்னு சொல்லிட்டு பெரிதாக ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பின் சந்தோஷம் என்னையும் தொற்றிக்கொண்டது. 

ராங் நம்பர் மூலம் ஆந்திராவில் இருந்து ஒரு தோழி கிடைத்தாயிற்று. (இருக்கிற பிரெண்டு எல்லாம் போதாதா என்று பேக்கிரௌண்டு சத்தம்...வேற எங்கிருந்து...என் வீட்டுக்குள்ளே  இருந்துதான் ). 

இனி நம்ம வழக்கமான பிளேடை அங்கேயும் போடலாம். மொழி தெரியாட்டி கூட நாங்க ஒரு மணி நேரம் பேசுவோம்ல...

நாங்க யாரு...பெண்களாயிற்றே.... 







21 comments:

  1. BP யை கொஞ்சம் குறைக்கும் பப்பிலி சகோதரிக்கு வாழ்த்துக்கள்... எதற்கும் இணைய சகோதரி "பெண் என்னும் புதுமை"யை விசாரிக்கவும்... அப்பாடா...! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. அவர்களுக்கும் வந்திருக்கலாம் என்று சொல்ல வந்தேன்... ஹா... ஹா...

      Delete
    2. அது சரி

      க்கும் அதான் சரி

      Delete
    3. எங்களை வம்புக்கு இழுக்கிறதே உங்களுக்கு வேலையா போச்சா...ஹாஹா...என்ஜாய்...

      Delete
  2. ராங் கால் நன்மையை (BP குறைவு ) கொடுத்தால் நல்லதே

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...அவங்க பேசுவாங்கன்னு எதிர்ப்பார்க்கிற மாதிரி வச்சிட்டாங்க..

      Delete
  3. முகம் பாராதும் மொழியறியாதும்
    யாரெனத் தெரியாதும் விடாது தொடர்ந்து
    பேசத் தெரியாவிட்டால் எப்படி நாமெல்லாம்
    சிறந்த எழுத்தாளராய் ஜொலிக்கமுடியும்
    சொல்லிச் சென்ற விதம் வெகு வெகு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் நடை இவ்வளவுதான் ஐயா....அதையே பாராட்டிட்டீங்க...நன்றி உங்களுக்கு...

      Delete
  4. ராங் கால் Bp யை குறைக்கும்... மணிக்கணக்கா கதைக்கலாம்...எதிர் முனைக்குதானே பில் ஆகப்போவுது... ஹா.. ஹா..!

    ReplyDelete
    Replies
    1. உஷா...இது நல்ல option ப்பா....நன்றி ஐடியாவுக்கு..

      Delete
  5. ராங் நம்பர் மூலம் ஆந்திராவில் இருந்து ஒரு தோழி கிடைத்தாயிற்று.

    வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...ராஜேஸ்வரி நாம் நேரில் பார்க்கும் போது அவங்களை உங்களுக்கும் தோழியாக்கிவிடுகிறேன்...நன்றி...

      Delete
  6. எனக்கு bp குறைக்கிற மாதிரி ராங் no வராது ஏத்தி விடுற மாதிரி தான் வரும்

    ReplyDelete
  7. உங்களுக்கு தோழி கிடைதாயிற்று ஆனா பில் ...கட்டும்போது ...சரியான கால் சார்ஜ்யே பார்க்கும் போது தலை சுற்றும் ராங் கால் சார்ஜ் மயக்கம் வராம இருந்தா சரிதான்

    ReplyDelete
    Replies
    1. அது என் வீட்டுக்காரருக்கு இல்ல வரணும்....

      Delete
    2. Happy friending on wrong calling. In life too wrong calls from nowhere lead us to somewhere we know not where. Happy landing Ahil.

      Delete
    3. u r right...but this is a right number from a wrong call....thankx pa...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....