என் சிறு வயதில்
பாட்டி வீட்டின்
சிவப்பு ஓடு போட்ட முற்றத்தில்...
கொல்லைப்புறத்தில் கோபுரம் கட்டியிருக்கும்
வைக்கப்போரின் ஈரமான ஓரங்களில்...
நெளிந்து நெளிந்து விரைவாய்
நீ எங்கோ அவசரமாய் ஓடுவதை பார்த்திருக்கிறேன்...
உன்னை போல் நிறைய கால்கள் இருந்தால்
ஓட்டப்பந்தயத்தில் ஓடியிருக்கலாமோ
என்றும் யோசித்திருக்கிறேன்...
உன்னை ஒரு இடத்தில் நிறுத்த
ஈக்கில் குச்சி ஒன்றை குறுக்கே வைக்க
போய்க்கொண்டிருக்கும் திசை மாற்றி
வேறு திசையில் ஓடுவதை ரசித்திருக்கிறேன்...
அதையே விளையாட்டாய் நாம் இருவரும்
எத்தனையோ முறை சலிக்காமல் விளையாடியிருப்போம்
என் சித்தி வந்து என்னை இழுத்துச் செல்லும்வரை...
நேற்று உன்னை என் வீட்டின்
சிமெண்ட் கட்டத்தில் பார்த்தபோது
பழைய விளையாட்டு ஞாபகம் வர
கம்பி ஒன்றை குறுக்கே வைக்க
இப்போதும் அதே போல்தான்
திசை மாறி ஓடுகிறாய்...
இலக்கு என்று உனக்கு ஏதுமில்லையோ
இல்லை திசையறிவதில் குழப்பங்கள் அதிகமோ
இலக்கின்றி எப்படி உன் வீடு சேர்வாய்...
கவலைதான் எனக்கு...
இந்தமுறை உன்னை தடுக்கவில்லை நான்
வந்த பாதை பிடித்தே உன் வீடு போய் சேர்ந்துக்கொள்...
பிறகு இலக்கு மாறியதா...? இல்லையா...?
ReplyDeleteகதை கேட்கும் ஆர்வம்?...
Deletegood....
ReplyDeleteநன்றி...
Delete