Monday, 22 April 2013

உலர்ந்து போனவை…




இல்லை என்பதாகவும் 
இருக்கிறது என்பதாகவும்  
இம்சிக்கும் மனதின் சுணக்கங்கள்...

அவை பின்னிச் செல்லும் வலைகளில்
நுழையும் மூச்சுக் காற்று
ஏதேதோ திசைகளில் பயணித்து 
இதயத்தைத் தொட முனைகையில் 
நிறுத்தச் சொல்லுமே 
நிஜம் உணர்த்தும் 
சில உலர்ந்து போன சொற்கள்... 

சொற்களை ஈரப்படுத்தும் ஆயத்தங்களில் 
மூச்சுக்காற்று தோற்கும் சந்தர்ப்பங்களே அதிகம்...

சுணக்கங்களின் மீட்சிகள் வேண்டுமானால்
இதயக்கதவை திறந்து 
நினைவுகளுக்கு மேடை போடலாம்...
அதுவும் கூட உலர்ந்தவைகளை 
உயிர்ப்பிக்க தவறிவிடும் சாத்தியக்கூறுகளே அதிகம்... 
  

  

4 comments:

  1. ஏதேதோ திசைகளில் பயணித்தாலே இப்படித்தான் தோணும்...

    ReplyDelete
  2. நிஜம் உணர்த்தும்
    சில உலர்ந்து போன சொற்கள்... கொட்டும் மழையிலும் ...

    ReplyDelete
  3. சில நேரம் இப்படிதான் ......

    ReplyDelete
  4. உலர்ந்தவை உயிர்பிக்க தவறலாம் ஆனால் கவிதை வரிகள் உலர்ந்தவற்றின் வரிகளால் உதிரம் பெற்று உயிரோட்டம் பெற்றுவிட்டன கவிதை நடை கொஞ்சம் கடினமாக இருந்தாலும் கருத்து அருமை வாழ்த்துக்கள் ..

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....