Friday, 19 April 2013

காலிழந்த காகமொன்று...



தத்தி தத்தி என் வீட்டு கம்பியின் மீது நீ
என் அருகாமையை கண்டுக்கொள்ளாமல்...

ஒன்றும் பேசிக்கொள்ளாமலே 
வெகு நேரமாய் பார்த்துக் கொண்டிருக்கிறோம்    
இருவருமாய் அந்த பெருஞ்சாலையை...

வாழ்வின் போராட்டத்தை நினைக்கும் 
மனவோட்டம் இருவரின் நினைவிலும் 

ஊனமான காலுடன் நீயும் 
ஊமையான பெண்ணினமாய் நானும் 
மௌனங்களை மட்டுமே சுமந்து
வெகு நேரமாய் பார்த்து கொண்டிருக்கிறோம் 
அந்த பெருஞ்சாலையை.... 




18 comments:

  1. //ஊனமான காலுடன் நீயும்
    ஊமையான பெண்ணினமாய் நானும்
    மௌனங்களை மட்டுமே சுமந்து
    வெகு நேரமாய் பார்த்து கொண்டிருக்கிறோம் //

    மனதை நெருடச்செய்யும் வரிகளுடன் ஊனம் பற்றிய கவிதையினை மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். .

    ReplyDelete
  2. மனதில் ஊனம் இல்லாமல் இருந்தால் சரி...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...உண்மைதான்...

      Delete
  3. கால் ஊனமான காகமும்
    மனம் ஊனமான பெண்ணும்
    ஜன்னலும் நீண்டு விரிந்த பெருஞ்சாலையும்
    அருமையான குறியீடுகள்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா...

      Delete
  4. ஆகமொத்தம் இருவருமே ஊமை ?

    ReplyDelete
  5. ஊனமான காலுடன் நீயும்
    ஊமையான பெண்ணினமாய் நானும்
    மௌனங்களை மட்டுமே சுமந்து
    கனமான கணங்கள்...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி தோழி..

      Delete
  6. துன்பம் எனபது இயற்கை துன்பமில்லாத வாழ்கை சுவாரசியம் இல்லை,ஓற்றை காலுடன் போராடும் காகத்தின் நிலை கவிதையா,கற்பனையா,இல்லை வாழ்கையின் மதிப்பீடா...

    ReplyDelete
    Replies
    1. நிஜமே...அதை கவிதையாக்கி இருக்கிறேன்...

      Delete
  7. உங்களின் ஒவ்வொரு கவிதைகளிலும் இழையோடுவது சோகமே ரசனையே என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா....செய்யுங்க....நன்றி...

      Delete
  8. kakathirku siraku illai enraal sithainthathu vazhvu !
    penne unakku naakku oru saattai.
    engellam eduthaala mudiyumo,
    arangetru !

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....