Wednesday, 10 April 2013

என் விரல்களில்...


.

கள்ளிச் செடிகள் சூழ்ந்திருந்த  
அந்த பழைய புகைவண்டி நிலையத்தின்
கம்பி வேலி துருப்பிடித்துப் போயிருந்தது...

தடவிக்கொண்டே வந்த என் விரல்களை 
சிவப்பாக்கிப் பார்த்தன... 

இருட்டு மெல்ல கவிழ தொடங்க 
நிலவின் மிதப்பில் 
மினுமினுக்க தொடங்கின கம்பிகள்...

தொட்டுச் சென்ற 
என் விரல்களில் 
ஒட்டிச் சென்றன 
நிலவின் வெளிச்சத் துண்டுகள்...    




12 comments:

  1. வரிகள் அருமை...

    (பிறகு TT Injection போட்டீர்களா...? ஹிஹி...)

    ReplyDelete
    Replies
    1. நண்பா....என்ன இப்படி...

      Delete
  2. இறுதி வரிகள் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல கவிதை ,தொட்டுச்சென்ற விரல்களில் ஒட்டிச்சென்ற நிலவின் துண்டுகள் பழைய ரயில் நிலையத்தின் காட்சி பிடிபட்டுப்போகிறது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி விமலன்...

      Delete
  4. நிலவின் வெளிச்சத் துண்டுகள் விரல்களில் ஒட்டிக் கொண்டனவா? அருமையான, வியக்க வைத்து ரசிக்க வைத்த வரிகள்!

    ReplyDelete
  5. நிலவின் வெளிச்சத் துண்டுகள்... ரசிக்கவைத்த்து...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....