மீளாது மாண்டு போகும் என் இதயம்...
கைவிட்டு பிரியும் விரல்கள்
காற்றை தொட்டு திரும்பும்...
இலை இழுத்தோடும் ஓடையில்
நனைந்த பின்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்
உன் விரல்களின் வாசம்
அவை விட்டு செல்லும் சில நீர்த்துளிகளை
காயப்பட்ட கண்ணீரென கொள் அன்பே...
அடையாளமற்ற என்னின் அன்பு
வெளிச்சமற்ற நட்சத்திரங்களை உதிர்க்க
அவற்றின் இருட்டில் தொலையாதிருக்க
நிலவாய் உன்னை வேண்டி காத்திருக்கிறேன்...
இலை இழுத்தோடும் ஓடையில்
ReplyDeleteநனைந்த பின்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்
உன் விரல்களின் வாசம்
sweet lines
நன்றி நண்பா...
Deleteஎன்னமோ போங்க... அருமையா இருக்கு சகோதரி...
ReplyDeleteம்ம்ம்...
Deleteஅடையாளமற்ற என்னின் அன்பு
ReplyDeleteவெளிச்சமற்ற நட்சத்திரங்களை உதிர்க்க
அவற்றின் இருட்டில் தொலையாதிருக்க
நிலவாய் உன்னை வேண்டி காத்திருக்கிறேன்...
காத்திருப்பு கண்ணீர் மயமானது..
நிஜம்தான் தோழி...
Deleteகாதலின் உணர்வுகளை நன்கு நுகர்ந்த நாயகியின் உணர்ச்சி குவியாலான வரிகள் ..அதில் வரிகளின் கோர்வை அபாரம்,படிக்கும் போது நாயகியின் எண்ணங்கள் நம் மனதில் ஒரு நிமிட சலனத்தை ஏற படுத்துகிறது என்றால் அது கவிதையின் வெற்றி..அருமை ..
ReplyDelete// அடையாளமற்ற என்னின் அன்பு
வெளிச்சமற்ற நட்சத்திரங்களை உதிர்க்க //
அன்பு இருக்கிறது ஆனால் வெளிப்படும் போது கோபமாகவோ ,அமைதியாகவோ ,பேசாத நினைவுகளாகவோ வேறு விதமாக வெளிபடுவதினால் உண்மை அன்பு அடையாளம் அற்றதாக மறைந்து நிற்கிறது தவிர மறைந்து போகவில்லை ..பாடல் எனபது ஒவ்வரு வரிக்கும் ஒவ்வரு அர்த்தம் பேச படவேண்டும் ..இந்த வரிகள் பேசுகின்றன என்பதில் எந்த ஐயமும் இல்லை வாழ்த்துக்கள்.
ரசித்து உட்வாங்கி இருக்கிறீர்கள்...நன்றி ராஜன்...
Delete// என்னின் அன்பு //
ReplyDeleteஇது என்ன மேடம் புது வார்த்தையா இருக்கு :)
பழைய பழகிய வார்த்தைதான்...
Deleteகாத்திருக்கும் காற்றே உந்தன்
ReplyDeleteபூத்திருக்கும் புதுக்கவி கண்டேன்
வார்த்தையிலே கொட்டி விட்டாய்-அதனை
சேர்த்துவிட தூது செல்லவோ தோழி...!
இனிய கவிதை வாழ்த்துக்கள்
http://soumiyathesam.blogspot.com/