வருடும் குளிரின் ஒத்தடம்
முன்பனியின் முகம் காட்ட
கம்பளியின் இழைகளினூடே
கால் உள்ளிழுத்து சுருண்டிருக்கும்
அழுக்கான சரீரக்காரனின் ஆண்மை
இரவின் ஆட்டம் அருகாகும் பொழுதில்
கண்களின் வெளிச்சம் மோகம் உணர்த்தும்
எங்கோ பெண்ணின் வாசம்
நடந்தே அளந்தான் பாதையை
மீதமிருக்கும் ஆடைகளின் வழியே
வழிந்தோடும் அவனின் இளமை....
விளக்கறியா சந்தின் உள்ளில்
முகமறியா அவளின் முனகல்...
முன்பனியின் இறக்கத்தில்
மீண்டும் சுருண்டு உறங்கிப்போனான்
கம்பளியின் இழைகளினூடே
கால் உள்ளிழுத்து.....
இப்படியே போய் சேர வேண்டியது தான்...
ReplyDeleteம்ம்ம்.....
Deleteஉருக்கமான கவிதை...
ReplyDeleteநன்றி...
Deleteஅந்தோ பரிதாபம் அவன் நிலை! வித்தியாசமான கோணம் காட்டிய கவிதை அருமை!
ReplyDeleteநன்றி கணேஷ்...
Deleteஅச்சச்சோ
ReplyDeleteம்ம்ம்...
DeleteGOOD
ReplyDelete