Thursday, 28 March 2013

கண்ணாடி சில்லுகள்...




நிழல் தேடும் பாதையெங்கும்
சிதறி கிடக்கும் இந்த வெளிச்ச துண்டுகள் 
எதற்கும் உபயோகமில்லாமல்..

மரங்களின் இலைகளை தின்று  
வட்டமாய், சதுரமாய் நீளமாய் 
வேண்டும் உயிர் பெற்று
உடைந்து போன கற்பரப்பின் மீது வெளிச்சங்களாய்
நிழல் வெறுக்கும் கண்ணாடி சில்லுகளாய்
நடக்கும் வழி மறித்து 
எதற்கும் உபயோகமில்லாமல்....

12 comments:

  1. கவுரவர் சபையில் பீஷ்மன்போல்
    தீயோருக்குள் அடங்கிய நல்லோரும் எதற்கும்
    பயனற்றுத்தான் போவார்கள்
    இருளுக்குள் அடங்கிய ஒளிபோல,,,
    ஆழமான கருத்துடைய பகிர்வு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டுக்கு நன்றி ரமணி ஐயா...

      Delete
  2. கண்ணாடி சில்லுகளாய் நடக்கும் வழி மறித்து
    எதற்கும் உபயோகமில்லாமல்....தான் சில மனிதர்களும் உள்ளனர் என்பதனைச்சொல்லாமல் சொல்லியுள்ளது அழகோ அழகு தான்.

    நம் வெற்றிப்பயணத்தில், நம்மை காயப்படுத்தும் தடைக்கற்கள் இவைகள்./ இவர்கள்.

    நல்ல பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா...

      Delete
  3. அருமை...

    வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா...
    தடைக்கல்லும் உனக்கு படிகல்லப்பா...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி நண்பா..

      Delete
  4. பூக்களிலும் ..பனிபடர்ந்த ..புல் வெளிகளிலும் நடக்க வைத்த உங்கள் வரிகளை கண்ணாடி சில்லுகளில் நடக்க வைத்து காயத்தை உண்டாக்கி விட்டீர்கள்

    ReplyDelete
  5. நல்ல ரசனை.ஆனால் உப்யோகமற்றதல்ல,சிதறி ஓவியம் காட்டும் சிதறல்கள்,

    ReplyDelete
  6. புல்லின் நுனியில் படர்ந்து தொங்குகிறா பனித்துளியாய் சிதறிய கண்ணாடிச்சில்லுகள்.

    ReplyDelete
    Replies
    1. உடையாத கண்ணாடி சில்லுகள்....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....