Sunday, 17 March 2013

நீரின் சுவடுகள்...




எனக்கு நானே முழ்கியெழுந்த
 ஒரு குளக்கரையில்...

சுற்றி நீந்திய மீன்களையும் 
காலை சுற்றிய கருங்குவளையையும் 
அழகாய் மலர்ந்திருந்த அல்லியையும் 
தளைகள் விடுத்து உதறியெழுந்து 
ஈரத்தின் வாசத்துடன் 
கரையின் கற்களோடே 
பாதம் பதிய நடந்த பாதையில் 
என் பயணம் பற்றியே வந்தன 
நீரின் சுவடுகள்....

7 comments:


  1. வணக்கம்!

    நீரீன் சுவடுகள் நெஞ்ச நினைவென்னும்
    வேரின் சுவடுகள்! வெல்லு தமிழ்மணக்கும்
    சீரின் சுவடுகள்!சிந்தனையைத் தட்டுகிற
    கூரின் சுவடுகள் கொள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

  2. தமிழ்மணம் 1

    நெஞ்சை நெகிழுறச் செய்யும் கவியெண்ணிக்
    கொஞ்சும் தமிழ்மணத்தைக் கொள்ளக் கொடுத்துள்ளேன்!
    மிஞ்சும் தமிழ்ப்பற்றும் மேலாம் இனப்பற்றும்
    விஞ்சும் மனத்தின் விளைவு

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தமிழின் வழி உங்களை பின்பற்றுகிறோம்...உங்களின் சுவடுகள் நாங்கள்...நன்றி...

      Delete
  3. ஈரத்தின் வாசத்துடன்
    கரையின் கற்களோடே
    பாதம் பதிய நடந்த பாதையில்
    என் பயணம் பற்றியே வந்தன
    நீரின் சுவடுகள்..

    ஈரம் நிறைந்த வரிகள்..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா ( உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது)
    திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி ( இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி)
    வான்றோய் வற்றே காமம்( வான் தோய்வு அற்றே காமம்)
    சான்றோ ரல்லரியா மரீஇ யோரே.( சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே.)
    என்பது, ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி,'யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?' என்றது.பாடியவர் ஒளவையார்.
    இதையே இன்று எளிமையாக புதுக்கவிதையாக பாடியவர் புலவர் அகிலா

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....