உள்ளிருக்கும் மௌனம்
எங்கோ இழுத்துக் செல்கிறது
உடையும் சாத்தியகூறுகளுடன்...
ஆராதனைகள் இல்லாத கர்ப்பகிரகமாய்
நதியின் தழுவலில்லா நாணல்களாய்
கால்கள் கட்டப்பட்ட புறாவாய்
மீண்டும் தனித்து விடப்பட்டு
பாதை தவறோ பயணித்தவனின் தவறோ
இதய சுவர்கள் முழுவதும்
உன் பெயர் கொண்டு ஆணியடித்து திரும்பினால்
மௌனம் என் பின்னே பனிக்கட்டியாய்...
உள்ளுக்குள்ளே புதைந்து இருப்பதிலும் ஒரு சுகமிருக்கிறதோ அகிலா....
ReplyDeleteமௌனமே ஒரு சுகம் தானே எழில்...
Deleteஆராதனை இல்லாத கற்பக்கிரகமாய்//அருமையான உவமை நன்று.
ReplyDeleteமௌனம் சில்லிட்டது...
ReplyDeleteமனித மனங்கள் ஏக்கங்களை கொண்டது ஒவ்வரு வயதிலும் ஒவ்வொன்ற்றுகான ஏக்கம் ஏக்கத்தின் முகங்கள் ஏராளம் ஏக்கங்களின் வகைகள் ஏதுவாக இருந்தாலும் அன்புக்கான ஏக்கம் இங்கே மனித மனகளிடையே அதிகமாக உள்ளது அன்புக்கான தேடலும் அதிகம் ..வரிகளின் தேடல் அற்புதம்.
ReplyDeleteமௌனம் மிகவும் அழகான
ReplyDeleteபனிக்குமிழ் ...
தன்னிலையில் இருக்கையில்
அழகோவியமாய்...
உடைபட்டால் அதன் வீரியம்
அபாரமானது...
மெளனம் கொடுமையானது.. சிலநேரங்களில் சுகமானதும்கூட..
ReplyDeleteமெளனம் ஒரு பனிக்கட்டியாய்... என்ன அழகான உவமை! பல சமயங்களில் மெளனம் எனக்கு பரம சுகமாய் இருப்பதாய் உணர்ந்திருக்கிறேன். நடைமுறை வாழ்வில் அதிகம் கடைப்பிடிக்கத்தான் நம்மால் முடிவதில்லை! அருமைங்க உங்க படைப்பு!
ReplyDelete