காயப்படுத்திய உன்னின் வார்த்தை அம்புகள்
ஒதுங்கின பெண்ணின் இதயக் கூட்டுக்குள்
திறந்துவிடும் சாவியை தொலைத்து
வழிநெடுக தேடுகிறாய்...
கையில் கிட்டிய கொட்டைகளை
அடிமரத்தின் பொந்தொன்றில் ஒளித்து வைத்து
பின் அடிமரம் தேடும் அணிலை போல...
மனதில் உறுத்தியதை வருட
மௌனத்தையே காற்றாக்கி
விலகலின் வஸ்திரம் கொண்டு
திறக்காதிருக்கிறேன் இன்னும்
திறவுகோலை தேடியெடுத்து வருவாயென்று...
அவன் வருவான் மீண்டும் தருவான்
ReplyDeleteபார்ப்போம்....அடுத்த கவிதையில்..
Deleteசூப்பர்..
ReplyDeleteநன்றி கோவி....
Deleteகாயப்படுத்தியதை உணரும் வரை அப்படியே கொஞ்ச நாள் தேடிட்டே இருக்கட்டும்...
ReplyDeleteசரியான யோசனைதான்...கடைபிடிக்கலாம்....
Deleteஇதற்கான கருத்து எதை இடுவது எந்தன் சிறிய அறிவுக்கு எட்டவில்லை ஆகையால் முன் கருத்து கூறிய மூவரின் கருத்துகளையும் ஒன்றாக சேர்த்து என் கருத்துகளாக ஏற்றுகொள்ளவும்
ReplyDeleteஇப்படியும் ஒரு கருத்தா....
Deleteகாதலில் காத்திருப்பதும் சுகம்தானே..!
ReplyDeleteஅழகான காத்திருப்பு அது....ஆனால் அவசியமில்லாத காத்திருப்பாகிவிடுகிறது சில சமயங்களில்....
Deleteகாதலில் காயம் பட்டாலும் முதலில் வாய் திறப்பது பெண் தானே?
ReplyDeleteகாத்திருக்காமல் போய் பேசிவிடலாம் - உண்மையான காதல் இருந்தால்!
ம்ம்ம்...உண்மையும் கூட....
Delete