Thursday, 14 February 2013

அடுக்கு மாடி குடியிருப்பில்....





எதிர் கதவின் பின்
புன்னகையை செலவு செய்ய
காசு கேட்கும் மனிதர்கள்தான்...

பக்கமாய் பார்த்தால்
பாந்தமாய் பேசுவதாக
பாவனைகள் செய்வார்கள்...

நம் அகம் புகுந்து
அழகாய் நோட்டமிடும்
ஆந்தை கண்கள்...  

அமர்த்தலாய் வந்தமர்ந்து
காபியை நிராகரித்து
டீ கேட்கும் அமர்க்களம்...

அக்கம்பக்கம் பற்றி புறம் சொல்லி
தினத்தந்தியை தலைகீழாய்
ஒப்பிக்கும் திறமை...

தன் வீட்டில் வைக்காத சாம்பாரை
மேல் வீட்டில் இருந்து வாங்கி
தன் கணவனுக்கே பரிமாறுகிற சாதுர்யம்...

நடிப்பாய் இருக்கும் நட்பு பூக்கள்தான் – ஆயினும்   
என் உதட்டோர சிரிப்புக்கு சொந்தக்காரர்கள்...
இவர்கள்தான் அடுக்கடுக்காய் தெரியும்
ஜன்னல் வழி உலகங்கள்...






23 comments:

  1. எப்படிங்க தினமும் சமாளிக்கிறீங்க...?

    ReplyDelete
    Replies
    1. சென்னைக்கு வந்தாச்சுன்னா தானே கத்துக்குவோம் தனபாலன்....

      Delete
  2. //நடிப்பாய் இருக்கும் நட்பு பூக்கள்// வித்தியாசமான வார்த்தைக் கோர்ப்பு

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலாகுமரன்....

      Delete
  3. அடுக்குமாடி
    ஆத்தி நடிக்கும் நட்பு.................ம்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....அதுதான் பட்டிணம்...

      Delete
  4. ஹா...ஹா...
    இதுவும் இல்லை என்றால் யன்னல்தான் மிச்சம் .:))

    ReplyDelete
    Replies
    1. அதுவும் உண்மைதான்...

      Delete
  5. அருமையான வெளிப்பாடு ...நான் அடுக்குமாடியில் 5 வருடம் இருந்தேன் ஆனால் என் பக்கத்துக்கு flat -ல இருபவரிடம் ஒருமுறை கூட பேசியது இல்லை அவரும் பேசியது கிடையாது என்ன உறவுகளோ ... கலாச்சாரமோ தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. இப்படிதான் இருப்பார்கள்...

      Delete
  6. அடுக்கு மாடிகள் பற்றி படித்ததில் சில வரிகள் ஞாபகம் வந்தது இந்த பதிவிற்கு அது பொருத்தமாக இருபதினால் சற்று நினைவுகூர்கிறேன்

    கிராமங்களில் எல்லாம் எந்த வீட்டில் யார் வாழுகிறார்கள் அவர்களது பாட்டன் யார் பூட்டன் யார், எப்பேர்ப்பட்ட குடும்பம் என்ற விவரமெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கும், இதனால் யார் யாரோடு எப்படி பழகலாம் என்பதும் அவரவர்களுக்கே நன்கு தெரிந்திருக்கும், நகர வாழ்க்கையில் அப்படி கிடையாது, அடுத்த வீட்டுக்காரர் எங்கு வேலை செய்கிறார் என்ன வேலை செய்கிறார் எந்த ஊர் சொந்த ஊர் என்பதை அவர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள முடியும் அப்படிப்பட்டவர்களை நம்பி பேசுவது கூட தொல்லையில் தான் முடிவடைகிறதே தவிர நல்ல உறவுக்கு வித்திடுவது கிடையாது.

    இதனால் இன்டர்நெட்டில் சாட்டிங் என்ற முறையை பயன் படுத்தி யாரோ ஒருவருடன் சிறிது நேரம் பொழுது போக்கிற்காக பேசுவதில் எந்த வித பாதிப்பும் இல்லையென்றே சொல்ல முடியும்.

    அதுமட்டுமில்லாது சாட்டிங் செய்பவருடன் பேச அல்லது பழக பிடிக்கவில்லை என்றால் உடனே நிறுத்தி விடவும் முடியும். பஸ் நண்பன் ரயில் நண்பனைப் போல பிரச்சினை அற்றது.

    ReplyDelete
  7. இவிங்க எப்பவுமே இப்படித்தான்.மாநகரம் ஆனால் மனம் இருக்காது எல்லாமே எப்போதுமே போலியான சிரிப்பு அவசரம் ஆற்றாமை.அதுவும் ஒரே துறையில் பணிபுரிந்தால் போச்சு
    விடுங்கம்மா நம்ம ஊருக்கு போனா எல்லாருமே அன்பா உபசரிப்பாங்களே அதை நினைச்சி சந்தோசபடுங்க

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான் கண்ணதாசன்....

      Delete
  8. உண்மைதான் என்றாலும்,சென்னையில் கூட வேலை பார்ப்பவர்கள் கொஞ்சம் பரவாயில்லை. இங்கு அமெரிக்காவில் அதுவும் கிடையாது. பத்து வருடம் கூடவே வேலை பார்ப்பவர் பற்றிகூட மற்றவருக்கு எதுவும் தெரியாது. எங்கு வசிக்கிறார் என்று கூட தெரியாது! ட்ரெயினில் பர்ஸ்ட் கிளாசில் பயணம் செய்வது போல தான். யாருக்கும் மற்றவரை பற்றி ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அக்கறையும் கிடையாது! என்ன வாழ்க்கையோ!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சிறிது காலத்தில் இங்கே அதுவும் அரங்கேறிவிடும். கவலைப்படாதீர்கள்...

      Delete
  9. கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மாறி வருகின்றன மேடம்!! சக மனிதனை நேசிக்க பெரும்பாலானோருக்கு நேரமுமில்லை, விருப்பமுமில்லை.. ஒரு ஆபத்து, அவசரத்தில் உறவுக் காரர்கள் வரும்முன் பக்கத்து, எதிர் வீட்டுக் காரன்தான் உதவுவான் என்பதை அனைவரும் அறிய வேண்டும்! கவிதை நன்று! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பாய் பார்க்க வருகிறார்களே என்று நினைத்து கதவை திறந்தால், வம்பாய் பார்க்கத்தான் வருகிறார்கள்....டைம் பாஸ் ஆகிவிட்டது வாழ்க்கை...

      Delete


  10. அடுக்கு மாடி! உள்ளதை உள்ளவாறே உரைத்தீர் சிறப்பு!

    ReplyDelete
  11. அனுபவக் கவிதையோ தோழி? நகர மனிதர்கள் யாவரும் முகமூடிகளுடன் நடமாடிடவே நிர்பந்திக்கிறது அவசர வாழ்க்கை. தங்களின் போலித்தனங்களை சாதுரியமென சாயம் பூசி தங்களெக்கெ ஆறுதல் சொல்லிக் கொள்கிறது நகர மாந்தர் கூட்டம். இதிலிருந்து தனித்திருப்பதே பெரிய சவால் தான். இல்லையா?!

    ReplyDelete
    Replies
    1. இது அனுபவக் கவிதைதான்...கதவை சாத்தியே வைத்தாலும் தப்புதான்...திறந்தாலும் தப்புதான்...

      Delete
  12. இங்கு கொஞ்சம் வித்தியாசம் - யாரும் யார் வீட்டுக்கும் தேடி வருவதில்லை. வெளி வராந்தாவில் பார்த்தால் கொஞ்சம் போல பேச்சு. உன் தலைவலி எனக்கு வேண்டாம்; என் தலைவலி உனக்கும் வேண்டாம் என்ற போக்கு. இது பரவாயில்லையா?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...பரவாயில்லை என்றே சொல்லுவேன்....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....