Skip to main content

ரயில் பயணங்களில் 3....

அருகில் ஆண்கள்...என் பயணங்கள் பெரும்பாலும் ரயிலில்தான். அதனால் அவை எனக்கு மிகவும் பிடித்தவைகளாகிப் போனது.  ரயில் பயணங்களின் போது விதம் விதமான பெண்களை சந்திக்கிற சந்தர்ப்பங்களும் கிடைக்கிறது....பாவம் என்கிட்டே வந்து அவங்களா மாட்டுறாங்க....

நான் முதல்ல பேசாமதான் இருப்பேன். பக்கத்துல உட்கார்ந்துகிட்டு 'வேலைக்கு போறீங்களா...' என்று ஆரம்பிப்பாங்க...'ம்ம்ம்...' என்று சொல்லிவிட்டு என்பாட்டுக்கு காதில் earphone மாட்டிக் கொண்டு உட்கார்ந்துவிடுவேன் ஒரு ஆங்கில நாவலுடன். அதைத்தான் யாரும் கடன் கேட்கமாட்டார்கள்.


ஒரு முறை பயணத்தின் போது என்னருகில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். ஆரம்பம் முதல் சென்னை வந்து சேரும் வரை அவரின் மூட்டு வலியே என் காதுவலி ஆகிப்போனது....ஒரு தைலம் எடுத்து தடவிவிட்டு அதற்கான காரணத்தை ஒரு அரை மணி நேரம் விளக்கியிருப்பார்...இன்னொரு முறை ஒரு பெண்மணி என்னை இடம் மாறி அமரச் சொன்னார். எதற்கு என்ற என் கேள்விக்கு,  அவரின் பதில் இதுதான்.... ஒரு ஆணின் அருகில்  அமரமாட்டாராம் அதுவுமில்லாமல் தன் கணவரின் அருகில் தான் அமரவேண்டுமாம் பயணம் முழுவதும். அதனால் நான் என் இருக்கையை மாற்றி அமரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாட்டேன்னு மறுத்துட்டேன். வீட்டுல எலியும் பூனையுமா இருப்பாங்க. வெளிய வந்தா பிரியவே மாட்டேன்னு காமெடி பண்ணுவாங்க.

எனக்கு இந்த மாதிரி ஓவரா கண்ணகி வேஷம் போடுற பெண்களை பார்த்தால் பிடிப்பதில்லை.  இந்த பெண்கள் என்னமோ ஆண்களையே தொடாத மாதிரி பேசுவார்கள். அதுவும் முக்கியமா கணவனுடன் இருந்தால் மட்டுமே....கோவிலில், பேருந்துகளில், சினிமா தியேட்டரில் என்று எங்கு பார்த்தாலும்  கியூவில் ஆண்களை இடித்து முந்திக் கொண்டு போய் டிக்கெட் எடுப்பது, வரிசையில் இடம் பிடிப்பது இதெல்லாம் செய்வார்கள்...

இதில் அவர்கள் கணவன்மார்கள் அவர்களுக்கு மேல் யோக்கியம் மாதிரி பேசுவார்கள். அந்த அம்மா இல்லாமல் தனியா வந்திருந்தா பக்கத்தில் உட்காரும் பெண்மணியிடம் அவரின் சாகசங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். நொடிக்கு ஒரு முறை அசைந்துக்கொண்டே இருப்பார். கையை  சீட்டின் கைப்பிடியில் வைப்பதும் எடுப்பதுமாக இருப்பார். 

ஒரு முறை வரும்போது இப்படிப்பட்ட ஒரு குடும்பத்திடம் மாட்டி தன் சீட்டை விட்டு என்னருகில் வந்தமர்ந்த பெண்மணியிடம் சொன்னேன் . குழந்தை இருப்பவர்கள், வயோதிகர்கள், உடல் முடியாதவர்கள் இப்படிபட்டவர்களை தவிர இனி யார் வந்து சொன்னாலும் உங்கள் இருக்கையை விட்டுக் கொடுக்காதீர்கள் என்று. தலையாட்டிக் கொண்டார் அந்த அப்பாவி அம்மணி...
இந்தமுறை என்னருகில் ஒரு சுவாமிஜி அமர்ந்திருந்தார். முதலில் ஒரு புன்னகையை போட்டு வைத்தார். காதில் earphone மாட்டி கண் மூடி கை கூப்பி ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். பஜனாக இருக்குமோ....சொல்ல முடியாது... ஜன்னலின் ஓரமாய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன். இடையிடையே மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் போனில் பேசிக் கொண்டிருந்தார். நேரெதிர் சீட்டிலிருந்து கணவருடன் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி என்னையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார்.

இடையில் நான் எழுந்து போய்விட்டு வரும் போது அந்த சுவாமிஜி, நான் உள்ளே போக வழிவிட எழுந்தார். உடனே அந்த பெண்மணி, ' நீங்க வேணும்னா இங்கே உட்காருங்களேன்...' என்று அவரருகில் உட்கார எனக்கு இன்விடேஷன் வைத்தார். அவர் என்னை பாதுகாக்கிறாரா இல்லை சுவாமிஜியையா என்று யோசித்தேன். நேராக  சுவாமிஜியிடம் 'are u comfortable?'  என்று கேட்டேன். அவர் ' no problem...you can sit here...'  என்று சொன்னார். என் இடத்திலேயே அமர்ந்தேன்.

அதுக்கு அப்புறம் நானும் அவரும் நண்பர்கள் ஆகிவிட்டோம். தமிழ் அழகாய் பேசினார். உபநிஷத்துக்களை பற்றி, சன்யாசத்தில் இருக்கும் சந்தோஷங்களை பற்றி எல்லாம் சொல்லி கொண்டே வந்தார். இன்னொரு வயதான அம்மாவுக்காக இடம் மாறி அமர்ந்தார். போகும் போது மரியாதையுடன் விடைபெற்று சென்றார். காவி உடைக்குள் ஒரு நல்ல மனிதர். 

அந்த பெண்மணியின் மனதில் இருந்த அசுத்தமான எண்ணங்கள் அவரை மட்டும் பாதிக்காது. அவரை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.  நல்ல எண்ண அலைகள் எப்படி நம்மை சுற்றி இருப்பவர்களையும் நம்மையும் பாதுகாக்குமோ அது மாதிரி தான் தீய எண்ணங்களும்...

ஒருவரை பார்த்த நிமிடமே நல்லவர், கெட்டவர் என்ற முடிவு எடுக்கும் குணத்தை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். சமுதாயம் எவ்வளவோ மாறியிருக்கிறது. ஆணுக்கு நிகராய் நாம் இன்று அமர்ந்திருக்கிறோம் எல்லா துறைகளிலும். இருக்கையில் அருகருகே அமருவதால் நம் கற்பு பறிபோவதில்லை. தூய்மை நம் மனதில் வேண்டும். மற்ற பெண்களை  பார்க்கும் பார்வையிலும் தூய்மை வேண்டும்.

ஆண்களையும் சக மனிதர்களாய் பார்ப்போம். அவர்கள் வரம்பு மீறினால் மாறி அமருவோம்.  நாம் எடுத்த உடனே ஒரு ஆணை இடம் மாறி அமரச் சொல்லுவது அந்த ஆணின் கற்பை தப்பாக்குகிறது. பாரதி கூறியபடி கற்பை பொதுவில் வைத்து பழகுவோம். ஆணுக்கும் கற்பு உண்டு என்பதை புரிந்துக் கொள்வோம்.  தவறுகள் சமுதாயத்தில் குறையும்.  

இனியாவது திருந்த முயற்சிப்போம்...


 மேலும் படிக்க,                  

Comments

 1. remove that flying bird. Its disturbing

  ReplyDelete
 2. மற்றொரு அவதானிப்பு... மனிதர்களின் முகங்களைப் பார்த்து குணத்தை முடிவு செய்வதை ஒரேயடியாக மறுக்கவும் முடியாது என்பது என் மதிப்பீடு. மற்றபடி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஷாஜஹான்....

   Delete
 3. சுவாரசியமான பதிவு!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜோஸ்பின்...

   Delete
 4. பொதுவாக நமது உள்ளுணர்வு கணித்துச் சொல்லிவிடும்- ஒருவர் நல்லவரா கெட்டவரா என்று. நீங்கள் சொல்வது போல் போலியான தயக்கம் உதறப்பட வேண்டியதுதான். ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ வேற்றுகிரக வாசிகளா என்ன? அனைவரும் குடும்பத்தில் வாழ்கிற, உறவுளின் அருமை தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்று நம்புவோம். நம்பிக்கைக்கு மாறாக நடக்கும் சிலரை ‘கவனி’ப்போம்! அதுதான் சரி. எனக்கும் உங்களைப் போலத்தான் கருத்து - வளவளவென்று தேவையற்றவற்றைப் பேசுபவர்களை அறவே பிடிக்காது.

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி சில விஷயங்களில் மட்டும் பயத்துடன் தப்பா யோசிக்கிறதை மட்டும் பெண்கள் விட்டோழித்தால் போதும்...வீட்டிலும் வெளியிலும் பிரச்சனைகள் குறையும்....நன்றி கணேஷ்...

   Delete
 5. ஆண்களை யோக்கியனும் இல்லை அவர்களின் அருகில் உட்காருவதால் கற்ப்பு ஒன்றும் காணாமல் போய்விடாது என்றும் சொல்லி ஆண்களையும் மனிதர்களாக பாருங்கள் என்று கூறியமை நன்று.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கண்ணதாசன்...

   Delete
 6. ம்ம்ம்...நான் ட்ரெயின்லயோ ஃபிளைட்லயோ போகும் போது ஏகப்பட்ட அம்மணிகள்தான்..ஆனா ஒருத்தரும் பேசமாட்டேன்கிறாங்களே...ஒருவேளை நம்ம பார்வை மோசமா இருக்கோ....ஹிஹிஹி
  ஆனா ஒண்ணு...ஆண்களுக்கும் மரியாதை கொடுத்தீங்க பாருங்க......அங்க நிக்கிறீங்க.,...ரொம்ப தேங்க்ஸ்ங்க....

  ReplyDelete
  Replies
  1. ஆஹா....
   நாங்களும் தப்ப தப்புன்னு சொல்லுவோம்ல....

   Delete
 7. கண்களில் கண்டு கொள்ளலாம்...

  ReplyDelete
  Replies
  1. சொல்லமுடியாது தனபாலன்....சிலர் பார்க்க பார்க்க பிடிக்கும் category....

   Delete
 8. மனிதனின் கண்களிலேயே குணத்தை எடையிடும் திறனை பெற்றிருந்தோம் ஒருக் காலத்தில்..அது இப்போதும் நம்மிடையே இருக்கிறதா என்று என்னை நானே கேள்வி கேட்டாலும் என்னிடம் பதில் இல்லை..நல்லப் பதிவு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. எனக்கும் ஒரு நான்கு வருடங்கள் தொடர்ந்து இரயில் பயண வாய்ப்பு அமைந்தது.... அப்போதெல்லாம் என்னுடன் வருபவர்களுடன் பேசிக்கொண்டுதான் வருவேன்.. ஏதோ ஒரு புது விஷயம் புது மனிதர்களிடம்....ஏதோ திரும்பவும் பார்த்தால் ஒரு புன்சிரிப்புடன் தொடரப் போகும் இரயில் சினேகத்திற்கெல்லாம் ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டாமே நம் தோழிகள்... வீட்டிலேயே எல்லோரும் நமக்கேற்றார் போல் இருக்கமாட்டார்கள்... இரயிலில் அதற்கான அவசியமும் இல்லையே

  ReplyDelete
  Replies
  1. எழில்...ரயில் என்பது இதில் ஒரு கருவிதான்....நான் இங்கே குறிப்பிட்டிருப்பது மனிதர்களின் மனநிலைகளைதான்....இன்னும் சந்தேக கண்ணோட்டங்களும் தேவையில்லாத வம்பளப்புகளும்...நம் பெண்கள் மாறவேண்டும் எழில். ஆக்கபூர்வமான செயல்களை செய்ய பழக வேண்டும். அதைத்தான் இங்கே கூறவிரும்புகிறேன்...நன்றி எழில்...

   Delete
 10. பார்வைகளின் கணிப்பு எப்போதுமே சரியாக ஆகிவிடுவதும் இல்லை; தவறாக மட்டுமே இருப்பதுமில்லை. இருப்பினும், கவன்மாக இருந்துகொள்வதே நல்லது என்று நினைப்பேன் நான். ஆணின் அருகே அமர்வதால், ஒரு பெண்ணை வித்தியாசமாகப் பார்ப்பதும் கூடாது. போலவே ஆணின் அருகே பெண் அமர்வதைத் தவிர்ப்பதால், அவரைச் சந்தேகிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாகாது.

  ReplyDelete
  Replies
  1. அழகான அலசல் தோழி...நன்றி...

   Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி